வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் ஹலீம்

Photo of Vegetable haleem by Asiya Omar at BetterButter
318
2
0.0(0)
0

வெஜிடபிள் ஹலீம்

Jan-14-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் ஹலீம் செய்முறை பற்றி

தமிழ் நாட்டு மக்களின் ருசிக்கு தக்க காய்கறிகள்,மசாலா,பருப்பு,கோதுமை,ஓட்ஸ் சேர்த்து செய்து பார்த்தது இந்த பண்டிகை ஸ்பெஷலிற்கு ஒரு வித்தியாசமான பொருத்தமான குறிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடித்துக்கொள்ள:- கோதுமை ரவை - அரை கப்
  2. ஒட்ஸ் - கால் கப்
  3. கடலை பருப்பு -2 தேக்கரண்டி
  4. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
  5. மசூர் பருப்பு -2 தேக்கரண்டி
  6. பாசிப்பருப்பு -2 தேக்கரண்டி
  7. மசாலாவிற்கு தே.பொ:-
  8. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
  10. சீரகத்தூள் -1/4 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  12. சாட் மசாலா -1/4 தேக்கரண்டி
  13. கரம் மசாலா -1 /4 தேக்கரண்டி
  14. காய்கறிகள் தேவைக்கு:-
  15. நறுக்கிய கேரட்,பீன்ஸ்,உரித்த பச்சை பட்டாணி சேர்த்து அரை கப்
  16. வேக வைத்து உதிர்த்த சோயா - அரை கப்
  17. இனி தாளிக்க :
  18. எண்ணெய் & நெய் கலந்து -4 மேஜைக்கரண்டி
  19. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  20. நறுக்கிய வெங்காயம் -2 பொன்னிறமாக வறுக்க
  21. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  22. உப்பு- தேவைக்கு.

வழிமுறைகள்

  1. பருப்பு வகைகள், கோதுமை ரவை,ஓட்ஸ் சேர்த்து பொடி செய்து அரை மணி நேரம் இரண்டு கப் நீரில் ஊற வைக்கவும்.
  2. காய்கறிகள் நறுக்கி தயார் செய்யவும்.
  3. 10 சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது உப்பி வந்ததும் பிழிந்து எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் நெய் விட்டு வெங்காயம் முழுவதும் போட்டு சிவற வதக்கவும்.அலங்கரிக்க பாதி எடுத்து வைக்கவும்.
  5. வறுத்த வெங்காயம் மீதியோடு இஞ்சி பூண்டு வதக்கவும்.அனைத்து மசாலாவும் சேர்க்கவும்,காய்கறிகள் குறிப்பிட்டது சேர்த்து வதக்கவும்,தயிர் சேர்க்கவும்.
  6. நன்கு கலந்து 3-4 கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.மல்லி,புதினா சேர்க்கவும்.
  7. ஊற வைத்தது சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.இறுகி வரும் பொழுது அடி பிடிக்காமல் கிண்டவும்.
  8. சிறிது நெய் விரும்பினால் சேர்க்கலாம்.அடுப்பை அணைக்கவும்.
  9. தட்டில் எடுத்து சிவறப்பொரித்த வெங்காயம் அலங்கரித்துப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்