வீடு / சமையல் குறிப்பு / சௌத் இந்தியன் உருளைகிழங்கு போண்டா

Photo of South indian Potato bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
346
4
0.0(0)
0

சௌத் இந்தியன் உருளைகிழங்கு போண்டா

Jan-19-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சௌத் இந்தியன் உருளைகிழங்கு போண்டா செய்முறை பற்றி

மழை நேர மாலையில் சாப்பிட ஏதுவான போண்டா இது. ஒருவருக்கு இரண்டு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைகிழங்கு - 2
  2. பல்லாரி வெங்காயம் - 1
  3. பச்ச மிளகாய் - 2
  4. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  5. கருவேப்பிலை பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 2 சிட்டிகை
  8. உப்பு - 3/4 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  10. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  12. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  13. மேல் மாவிற்கு தேவையானவை
  14. கடலைமாவு - 1 / 4 கப்
  15. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  16. கான்பிளவர்-1 தேக்கரண்டி
  17. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  18. காரப்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  19. பெருங்காயம் - 2 சிட்டிகை
  20. போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும் வெங்காயம் பச்ச மிளகாய் இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் பச்ச மிளகாய் இஞ்சி தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. வேகவைத்த உருளைக்கிழங்கு மஞ்சள்பொடி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. நன்றாக வதக்கியபின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  5. வதக்கியதை பத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  6. மேல் மாவிற்கு கொடுத்தவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைகிழங்கு உருண்டையை மாவில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  8. சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்