வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு குருமா

Photo of Potato Kurma by Priya Tharshini at BetterButter
796
5
0.0(0)
0

உருளைகிழங்கு குருமா

Jan-19-2018
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு குருமா செய்முறை பற்றி

உருளைகிழங்கை வைத்து சுலபமாக செய்யப்படும் குருமா வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  2. கிராம்பு - 3
  3. பிரின்சி இலை -2
  4. பட்டை - 1 துண்டு
  5. ஏலக்காய் - 1
  6. உருளைகிழங்கு - 2
  7. ப.மிளகாய் - 1
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  9. வெங்காயம் - 1/2 கப்
  10. தக்காளி - 1/2 கப்
  11. கொத்தமல்லி - சிறிதளவு
  12. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  13. மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
  14. தனியா பொடி - 1 தேக்கரண்டி
  15. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  16. உப்பு - தேவைக்கேற்ப
  17. தண்ணீர் - தேவைக்கேற்ப
  18. தேங்காய் - 1/4 கப்
  19. முந்திரி - 3
  20. சோம்பு - 1 தேக்கரண்டி
  21. மிளகு - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. தேங்காய்,சோம்பு,முந்திரி,மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவும்.
  3. வெங்காயம் , கொத்தமல்லி , தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய் சூடாக்கி பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரின்சி இலை ஆகியவற்றை தாளிக்கவும்.
  5. பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  6. பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்க்கவும்.
  7. தக்காளி நன்கு வெந்ததும் மசாலா பொடிகளை சேர்க்கவும்.
  8. நறுக்கிய உருளைகிழங்கை சேர்த்து வதக்கவும்.
  9. தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும்.
  10. பிரஷர் அடங்கியதும் அரைத்த விழுது சேர்த்து கலந்து மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும்.
  11. கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
  12. கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அனைக்கவும.
  13. உருளைகிழங்கு குருமா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்