Photo of Potato somas & bonda (2 in 1) by Asiya Omar at BetterButter
772
7
0.0(0)
0

Potato somas & bonda (2 in 1)

Jan-21-2018
Asiya Omar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மகாராஷ்டிரம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோமாஸ் மேல் மாவிற்கு:-
  2. மைதா - அரை கப்
  3. கோதுமை - அரை கப்
  4. வெண்ணெய் அல்லது எண்ணெய் சூடு செய்தது -1 மேஜைக்கரண்டி
  5. உப்பு,தண்ணீர் தேவைக்கு.
  6. போண்டா மேல் மாவிற்கு :-
  7. கடலை மாவு - அரை கப்
  8. அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  11. உப்பு - சிறிது.
  12. உருளை மசாலா :-
  13. உருளைக்கிழங்கு - 400 கிராம்
  14. நறுக்கிய பெரிய வெங்காயம் -2
  15. நறுக்கிய பச்சை மிளகாய் - 3 -4
  16. மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
  17. சீரகம்,மஞ்சள் தூள் - தலா கால் தேக்கரண்டி
  18. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  19. அல்லது பெருங்காயம் - சிறிது.
  20. நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - சிறிது
  21. உப்பு - சுவைக்கு.
  22. பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. முதலில் சோமாஸிற்கு மேற் சொன்ன தே.பொ.சேர்த்து மாவு பிணைந்து வைக்கவும். ஒரு மணி நேரம் வைக்கவும்.
  2. அடுத்து போண்டாவிற்கும் மாவு கரைத்து கெட்டியாக வைக்கவும்.
  3. இனி மசாலா செய்ய உருளைக்கிழங்கை அவித்து தோல் எடுத்து லேசாக உதிர்த்து வைக்கவும்.
  4. வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம்,மிளகாய் வதக்கி,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. தூள் வகைகள் சேர்க்கவும்.வதக்கவும்.உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து வதக்கி மல்லி கருவேப்பிலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.ஆற விடவும்.கெட்டியாக இருக்க வேண்டும்.
  6. சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக நான்கு பிரித்து வைக்கவும்.மீதியை வைக்கவும்.
  7. சோமாஸ் செய்ய மாவை பூரிக்கு பரத்துவது போல் பரத்தி சோமாஸ் அச்சில் வைத்து மேலே ஒரு மேஜைக்கரண்டி உருளை மசாலா வைத்து மூடி அச்சை அழுத்தி எடுத்து வைக்கவும். 8 -10 சோமாஸ் வரும்.
  8. எண்ணெய் சூடு செய்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.சூப்பர் சோமாஸ் ரெடி.
  9. எடுத்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாஉருண்டைகளை தயார் செய்த போண்டா மாவில் தோய்த்து சோமாஸ் பொரித்த எண்ணெயில் போட்டு பொரிந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  10. சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார். சூப்பராக சோமாஸ் ,போண்டா தயாராகி விட்டது.உருளைக்கிழங்கு வாயு, எனவே அளவாகப் பரிமாறவும்.
  11. மாவின் அளவு உங்கள் தேவைக்கு ஏற்ப கூட்டிக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்