வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு சௌஃபில்

Photo of Potato souffle by Jayanthy Asokan at BetterButter
213
8
0.0(0)
0

உருளைகிழங்கு சௌஃபில்

Jan-22-2018
Jayanthy Asokan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு சௌஃபில் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு, சீஸ், முட்டை, பால்,மிளகு, மிளகாய் தூள் உப்பு சேர்த்து பேக் செய்யப்படுவது சௌபிப்பிலே ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரெஞ்ச்
  • விஸ்கிங்
  • பேக்கிங்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 3
  2. மொஸிரல்லா சீஸ் 50 கிராம்
  3. முட்டை 2
  4. பால் 6 மேஜைக்கரண்டி
  5. கொத்தமல்லி சிறிது அளவு
  6. வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  7. பிரட் தூள் 2 டேபிள் ஸ்பூன்
  8. மிளகாய் தூள் சிறிது அளவு
  9. மிளகு தூள் 1டேபிள் ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப.

வழிமுறைகள்

  1. ஓவென் யை 220டிகிரி சென்டிகிரேடு ப்ரீ ஹீட் செய்யவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  3. சீஸ் யை துருவி கொள்ளவும்.
  4. முட்டையின் மஞ்சள் கருவை தனியே பிரித்து கொள்ளவும்.
  5. முட்டையின் வெண் கருவை நன்கு அடித்து கொள்ள வேண்டும். ஸ்டிப்ப் பீக்ஸ் வரும் வரை.
  6. இப்படத்தில் உள்ள படி.
  7. பாலை சூடு ஆக்கி வெண்ணெய் அதில் சேர்க்க வேண்டும். வெண்ணெய் கரைந்த பின் மசித்த உருளை கலவையில் ஊற்ற வேண்டும்.
  8. சீஸ் மற்றும் மஞ்ச கரு சேர்த்து மிளகு தூள் உப்பு சேர்க்க வேண்டும்.
  9. நன்கு கலந்த பின் அடித்த வெண் கருவை நிதானமாக கலைக்க வேண்டும். அரிந்த மல்லி சேர்க்கவேண்டும்.
  10. ராமகின்ஸ் கப்பை வெண்ணெய் தடவி ரொட்டி தூள் தூவ வேண்டும்.
  11. இப்படத்தில் உள்ள படி.
  12. ரெடி செய்த கப்பில் கலவையை நிரப்ப வேண்டும். மிளகாய் தூளை அனைத்து கப்யின் கலவை மேல் தூவ வேண்டும்.
  13. இப்படத்தில் உள்ள படி.
  14. ஓவென் யில் 15நிமிடம் பேக் செய்தால் சௌபிப்பிலே ரெடி.
  15. மல்லி சேர்த்து அலங்கரிக்க வேண்டும்.
  16. ஆறும் முன்பே சூடாக பரிமாறவேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்