ஆலு சாட் | Aloo chat in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  26th Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Aloo chat by Krishnasamy Vidya Valli at BetterButter
ஆலு சாட்Krishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

3

0

4 votes
ஆலு சாட் recipe

ஆலு சாட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Aloo chat in Tamil )

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  • ஏலக்காய் கிராம்பு - தலா 1
  • பட்டை - 1 சிறிய துண்டு
  • வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  • தாளிக்க : சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  • எலுமிச்சைசாறு-1தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  • மினி பூரி ( விருப்பப்பட்டால் ) - 4
  • ஓமப்பொடி - 2 தேக்கரண்டி
  • காஷ்மீர்சில்லிபவுடர்-1/4தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  • கரம் மசாலா - 2 சிட்டிகை
  • சாட் மசாலா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  • உப்பு-1/2தேக்கரண்டி
  • கொண்ட கடலை - 1 / 8 கப் (விருப்பப்பட்டால் பாதி கொண்டகடலை பாதி பட்டாணி சேர்க்கவும்)
  • பேரீச்சம்பழம் - 1
  • புதினா இலை-4
  • தக்காளி - 1
  • வெங்காயம் - 1
  • உருளைக்கிழங்கு - 1

ஆலு சாட் செய்வது எப்படி | How to make Aloo chat in Tamil

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கொண்ட கடலை யை ஆறு மணி நேரம் வரை ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைக்கவும்
  4. மிக்ஸியில் தக்காளி புதினா பேரீட்சை உப்பு காஷ்மீர்சில்லிபவுடர் மஞ்சள்பொடி கரம்மசாலா சேர்த்துநன்றாகஅரைக்கவும்
  5. கடாயில் வெண்ணெய் போட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. அரைத்த தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும்
  7. உருளைக்கிழங்கு கொண்ட கடலை/பட்டாணி யை சேர்த்து கொதிக்கவிடவும்
  8. செமிசாலிட் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  9. ஒரு தட்டில் இந்த கலவையை எடுத்துக் கொள்ளவும்
  10. அதன் மேல் மினி பூரியை உடைத்து போடவும்
  11. மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் ஓமப்பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சாட் மசாலா பொடி எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து பறிமாறவும் .

எனது டிப்:

விருப்பப்பட்டால் டொமட்டோ/சில்லி சாஸ் விடலாம்

Reviews for Aloo chat in tamil (0)