Photo of Aloo chat by Krishnasamy Vidya Valli at BetterButter
112
6
0.0(0)
0

ஆலு சாட்

Jan-26-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆலு சாட் செய்முறை பற்றி

மாலை நேர சாட் வெரைட்டி இது. குழந்தைகள் மிகவும் விரும்பும் ஒரு ரோட்சைட் ஸ்நாக்ஸ். கொண்டகடலை ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை (தோராயமாக 6 மணிநேரம்)

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. புதினா இலை-4
  5. பேரீச்சம்பழம் - 1
  6. கொண்ட கடலை - 1 / 8 கப் (விருப்பப்பட்டால் பாதி கொண்டகடலை பாதி பட்டாணி சேர்க்கவும்)
  7. உப்பு-1/2தேக்கரண்டி
  8. சாட் மசாலா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா - 2 சிட்டிகை
  10. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  11. காஷ்மீர்சில்லிபவுடர்-1/4தேக்கரண்டி
  12. ஓமப்பொடி - 2 தேக்கரண்டி
  13. மினி பூரி ( விருப்பப்பட்டால் ) - 4
  14. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  15. எலுமிச்சைசாறு-1தேக்கரண்டி
  16. தாளிக்க : சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  17. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  18. பட்டை - 1 சிறிய துண்டு
  19. ஏலக்காய் கிராம்பு - தலா 1
  20. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கொண்ட கடலை யை ஆறு மணி நேரம் வரை ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைக்கவும்
  4. மிக்ஸியில் தக்காளி புதினா பேரீட்சை உப்பு காஷ்மீர்சில்லிபவுடர் மஞ்சள்பொடி கரம்மசாலா சேர்த்துநன்றாகஅரைக்கவும்
  5. கடாயில் வெண்ணெய் போட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. அரைத்த தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும்
  7. உருளைக்கிழங்கு கொண்ட கடலை/பட்டாணி யை சேர்த்து கொதிக்கவிடவும்
  8. செமிசாலிட் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  9. ஒரு தட்டில் இந்த கலவையை எடுத்துக் கொள்ளவும்
  10. அதன் மேல் மினி பூரியை உடைத்து போடவும்
  11. மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் ஓமப்பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சாட் மசாலா பொடி எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து பறிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்