மைசூர் பஜ்ஜி | Mysore Bajji/ Goli baje in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  16th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mysore Bajji/ Goli baje by Anjana Chaturvedi at BetterButter
மைசூர் பஜ்ஜிAnjana Chaturvedi
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2714

0

மைசூர் பஜ்ஜி recipe

மைசூர் பஜ்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Bajji/ Goli baje in Tamil )

  • 1/2 தேக்கரண்டி சமையல் சோடா
  • உப்பு சுவைக்கேற்ற அளவு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 10 கறிவேப்பிலை இலைகள் நறுக்கியது
  • 4 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி
  • 2 தேக்கரண்டி இஞ்சி நறுக்கப்பட்டது
  • 3 தேக்கரண்டி மிளகாய் நறுக்கப்பட்டது
  • 1 கப் தயிர்
  • 4 தேக்கரண்டி அரிசி மாவு
  • 2 கப் ரீபைண்டு மாவு/ மைதா

மைசூர் பஜ்ஜி செய்வது எப்படி | How to make Mysore Bajji/ Goli baje in Tamil

  1. மாவு வடை மாவு போல் நடுத்தர அடர்த்தியில் இருக்கவேண்டும், தண்ணீராக இருந்தால் வடை அதிக எண்ணெய் உறிஞ்சும்.
  2. இப்போது தயிர், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை. புதிய கொத்துமல்லி சேர்க்கவும். ஊற்றும் பதத்திற்கு (வடை மாவு போல்) நன்றாகக் கலந்துகொள்ளவும். மூடியிட்டு 15 நிமிடங்கள் விட்டுவைக்கவும், மிருதுவான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும்.
  3. போதுமான எண்ணெயை அகலமான பாத்திரத்தில் பொரிப்பதற்குச் சூடுபடுத்திக்கொள்க.
  4. உங்கள் விரல்களை தண்ணீரால் நனைத்து எலுமிச்சை அளவு சிறிது மாவை எடுத்து சூடான எண்ணெயில் மெதுவாக விடவும்.
  5. தீயை மிதமானச் சூட்டிற்கு குறைத்து பொன்னிறமாகும்வரை பொரிக்கவும்.
  6. பேப்பர் நாப்கினில் வடிக்கட்டி சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

1.மாவு நடுத்தர மான அடர்த்தியில் இருக்கவேண்டும். தண்ணியாக கரைத்துக்கொண்டால் வடை எண்ணெய் அதிகம் உறிஞ்சும். 2. மாவு தண்ணீராக இருந்தால் மேற்கொண்டு அரிசி மாவு சேர்த்து மாவின் அடர்த்தியை சரிசெய்துகொள்ளவும். 3. கொஞ்சம் புதிய தயிரைச் சேர்ப்பது நல்ல சுவையைத் தரும். இருந்தாலும் புதுத் தயிரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தும் பயன்படுத்தலாம். 4. மிதமானச் சூட்டில் பொரிக்கவும். அதிக தீயில் உள் பகுதி வேகாது, சிறு தீயில் அதிகம் எண்ணொய் உறிஞ்சும். 5. ஆறியதும் கடிப்பதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும் என்பதால் சூடாக இருக்கும்போதே பரிமாறவேண்டியது நல்லது.

Reviews for Mysore Bajji/ Goli baje in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.