Photo of Strawberry Guava Pickles by Hameed Nooh at BetterButter
732
8
0.0(1)
0

Strawberry Guava Pickles

Feb-02-2018
Hameed Nooh
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஸ்டாபெரி - 6
  2. கொய்யாக்காய் - 1
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் - 1
  7. நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. பொடித்த வெல்லம் - 1 மேசைக்கரண்டி
  11. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  12. உப்பு - சுவைக்கேற்ப
  13. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் கொய்யாக்காயை கழுவி நன்றாக துடைத்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு ஸ்டாபெரியையும் நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் பெருங்காயத்தூளை போடவும்.
  4. கடுகு வெடித்ததும் வெந்தயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  5. பிறகு இரு பாதியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து கிளறவும்.
  6. இஞ்சியின் பச்சை வாடை போனதும் நறுக்கிய கொய்யாக்காயை சேர்க்கவும்.
  7. பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்த்து குறைந்த தணலில் ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
  8. காய் வெந்ததும் நறுக்கிய ஸ்டாபெரி மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
  9. ஸ்டாபெரி நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாற்றை ஊற்றி ஒரு கிளறு கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
  10. இப்பொழுது சுவையான முவ்வகை சுவையும் கொண்ட ஊறுகாய் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Feb-04-2018
Juvaireya R   Feb-04-2018

Different ah eruku nice dr

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்