வீடு / சமையல் குறிப்பு / பனீர் நார்த்தங்காய் ஊறுகாய்

Photo of Paneer Citron Pickle by Hameed Nooh at BetterButter
371
6
0.0(0)
0

பனீர் நார்த்தங்காய் ஊறுகாய்

Feb-03-2018
Hameed Nooh
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பனீர் நார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி பொறித்து பிறகு தாளித்து நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்து செய்த சுவையான வித்தியாசமான ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் - 100 கிராம்
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. பூண்டு - 5 பற்கள்
  4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
  6. நார்த்தங்காய் ஊறுகாய் - 2 மேசைக்கரண்டி
  7. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  8. வினிகர் - 2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  10. சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி பனீரை போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
  3. அதே வாணலியில் கடுகு மற்றும் வெந்தயம் போட்டு பொறிந்ததும் நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.
  4. பூண்டின் பச்சை வாடை போனதும் மிளகாய் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
  5. பிறகு பொறித்த பனீரை போட்டு குறைந்த தீயில் வைத்து சிறிது சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்.
  6. இறுதியாக நார்த்தங்காய் ஊறுகாய் சிறிது சேர்த்து வினிகரை ஊற்றி ஒரு முறை கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  7. இப்பொழுது சுவையான பனீர் நார்த்தை ஊறுகாய் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்