வீடு / சமையல் குறிப்பு / நவரத்னா பருப்பு பொடி

Photo of Navarathna paruppu podi by Krishnasamy Vidya Valli at BetterButter
33
4
0.0(0)
0

நவரத்னா பருப்பு பொடி

Feb-10-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நவரத்னா பருப்பு பொடி செய்முறை பற்றி

வீட்டில் எப்போதும் துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு உபயோகித்து தான் பருப்பு பொடி செய்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஒன்பது தானியங்களைக்கொண்டு தயாரித்தால் எப்படி இருக்கும்? நல்ல ஆரோக்கியமான சத்தான பொடியாக இருக்கும். காரம் அதிகம் இல்லாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஏர்ஃப்ரையிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தானியங்கள்/பருப்புகள் - தலா 1 தேக்கரண்டி (துவரம்பருப்பு கடலைப் பருப்பு பாசிப் பருப்பு கொள்ளு கொண்ட கடலை பட்டாணி பச்ச பயறு மொச்சை ராஜ்மா தட்டாம்பயறு பொரிகடலை வேர்கடலை இவற்றுள் ஏதாவது ஒன்பது தானியங்கள் எடுத்துக்கொள்ளவும்)
  2. உப்பு -1/2 தேக்கரண்டி
  3. வெல்லம் -2 சிட்டிகை (பொடி)
  4. கட்டி பெருங்காயம்-1சிறிய துண்டு
  5. மிளகாய் வத்தல் -2
  6. மிளகு -1/4 தேக்கரண்டி
  7. சீரகம் -1/2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை-1 ஆர்க்கு
  9. எண்ணெய்-1டிராப்

வழிமுறைகள்

  1. தேவையானவற்றை அளந்து எடுத்துக்கொள்ளவும்
  2. பெரிய தானியங்களை தனியாக வறுக்கவும்
  3. மற்ற பருப்புகள்/தானியங்கள் தனியாக வறுத்துக்கொள்ளவும்
  4. மிளகு சீரகம் தனியாக வறுக்கவும்
  5. எண்ணெய் விட்டு பெருங்காயம் கருவேப்பிலை மற்றும் மிளகாய் வத்தலை வறுக்கவும்
  6. எல்லாம் சேர்த்து உப்பு வெல்லம் போட்டு மிக்ஸியில் திரிக்கவும்
  7. சத்தான நவரத்னா பருப்பு பொடி தயார். நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்