Photo of Vendaya mangai by Krishnasamy Vidya Valli at BetterButter
389
2
0.0(1)
0

Vendaya mangai

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நல்ல புளிப்பு மாங்காய் -1
  2. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  3. கல் உப்பு - 1 தேக்கரண்டி
  4. தாளிக்க
  5. நல்லெண்ணெய்- 4 தேக்கரண்டி
  6. கடுகு -1/2 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 1/4 சிட்டிகை
  8. காரப்பொடி -2 தேக்கரண்டி
  9. வெந்தயப்பொடி- 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மீடியம் ஸைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள் பொடி போட்டு கிளறி அப்படியே வைக்கவும்
  3. ஒரு நாளைக்கு பிறகு அதில் தண்ணீர் இருக்கும். தண்ணீரை தனியாக எடுக்கவும்
  4. அந்த தண்ணீரை ஒரு நேரம்(காலை மட்டும்) வெயிலில் வைத்து எடுக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெயிலில் வைத்து எடுத்த தண்ணீரை சேர்க்கவும்
  6. மாங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்
  7. ஒரு நாள் கூட ஆனதும் அந்த தண்ணீர் முழுவதையும் மாங்காய் குடித்து விடும். நல்ல மாங்காய் இல்லையெனில் இந்த ஊறுகாய் நன்றாக இருக்காது.
  8. அதன்பின் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Feb-16-2018
Saranya Manickam   Feb-16-2018

Hi Vidya, yummy recipe..how many days we can store this pickle?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்