வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Vegetable Pulav by விருதை சமையல் at BetterButter
434
4
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ்

Feb-20-2018
விருதை சமையல்
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி

வெஜிடபிள் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி - 200 கிராம் (1கப்)
  2. தண்ணீர் - 1  கப் 
  3. தேங்காய் பால் - 1கப்
  4. பெரிய வெங்காயம் -1 (நீளமாக நறுக்கியது)
  5. பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)
  6. பச்சை பட்டாணி - 30 கிராம்
  7. கேரட்- 1 (பொடியாக நறுக்கியது)
  8. பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
  9. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி 
  10. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  11. பட்டை - 1
  12. கிராம்பு - 4
  13. நட்சத்திர சோம்பு - 1
  14. ஏலக்காய் - 2
  15. முந்திரி பருப்பு - 8
  16. பிரியாணி இலை -1
  17. நெய் - 3 தேக்கரண்டி
  18. எண்ணெய் -2 தேக்கரண்டி 
  19. உப்பு - தேவையான அளவு 
  20. கொத்தமல்லித்தழை - சிறிதளவு 

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். 
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 தேக்கரண்டி நெய் ,2  தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் சோம்பு, பட்டை , கிராம்பு , ஏலக்காய் , நட்சத்திர சோம்பு, பிரியாணி  இலை, முந்திரி பருப்பு போட்டு வதக்கவும்.
  3. அதனுடன்  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும் அதனுடன்  கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, ஊற வைத்த அரிசி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. பின்பு 1 கப் தண்ணீர் மற்றும் 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு சிம்மில் வேகவிடவும்.
  6. நீர் வற்றி சாதம் வெந்ததும் அரிசி உடையாமல் பக்குவமாக கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.
  7. உதிரியான சுவையான வெஜிடபிள் புலாவ் தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்