Photo of Mullikaai Pulikuzhambu by Mehala Ramakrishnan at BetterButter
1385
3
0.0(1)
0

Mullikaai Pulikuzhambu

Feb-23-2018
Mehala Ramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mullikaai Pulikuzhambu செய்முறை பற்றி

சுவையான சத்தான முள்ளிக்காய் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முள்ளிக்காய் 100கி
  2. சின்ன வெங்காயம் 100கி
  3. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  4. தக்காளி 4
  5. மசாலா அரைக்க
  6. வத்தல் பெரியது 10
  7. தனியா 25கி
  8. சீரகம் 1 மேஜைக்கரண்டி
  9. தேங்காய் 1/4 முடி
  10. தாளிக்க கடுகு வெந்தயம் உளுந்தம் பருப்பு தலா 1 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வத்தல் மற்றும் தனியா ஆகியவற்றை இளம் சூட்டில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
  2. முள்ளிக்காயை இரண்டாக வெட்டி அதனுள் இருக்கும் விதைகளை ஒரு ஸ்பூன் வைத்து நன்கு சுரண்டி எடுத்து 2 முறை கழுவவும்..
  3. பின்னர் இதனுடன் சீரகம் பச்சையாக சேர்த்து துருவிய தேங்காய் ஒரு தக்காளி சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. இப்போது 50கி எண்ணையை ஒரு அடிகணமான பாத்திரத்தில் ஊற்றி என்னை காய்ந்ததும் கடுகு வெந்தயம் உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்
  5. கடுகு முழுவதுமாக பொரிந்ததும் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்..
  6. பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்..
  7. இப்போது சுத்தம் செய்த முள்ளிக்காயை அதனுடன் சேர்த்து சிறிது வதக்கவும்..
  8. கரைத்துவைத்த புலிகரைசளை இதனுடன் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  9. குழம்பு நன்கு கொதித்ததும் தீயை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்..
  10. குழம்பில் இருந்து என்னை பிரிந்து வந்ததும் அடுப்பை அமற்றி விடவும்..
  11. சுவையான முள்ளிக்காய் புளிக்குழம்பு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-24-2018
Pushpa Taroor   Feb-24-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்