வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய வாழைக்காய் பொடி

Photo of Traditional Raw banana podi by Krishnasamy Vidya Valli at BetterButter
348
3
0.0(0)
0

பாரம்பரிய வாழைக்காய் பொடி

Feb-25-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாரம்பரிய வாழைக்காய் பொடி செய்முறை பற்றி

கல்யாண வீடுகளின் விருந்தில் கட்டாயம் ஒருநேரம் இந்த வாழைக்காய் பொடி செய்வார்கள். செய்வது சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் -2 (மொந்தன் வாழைக்காய்/சிங்கன் வாழைக்காய்)
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  5. தாளிக்க
  6. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
  7. கடுகு -1 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  9. பெருங்காயம் -4 சிட்டிகை
  10. கருவேப்பிலை -2 ஆரக்கு
  11. பச்ச மிளகாய் -2
  12. இஞ்சி -1 சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தண்ணீரில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை முழுதாக வேகவிடவும். குழைய வேக கூடாது. துருவும் அளவிற்கு வெந்தால் போதும்.
  2. வெந்ததும் ஆறவைத்து தோல் உரித்து துருவிக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து துருவிய வாழைக்காயை உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
  5. எலுமிச்சை சாறு கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்