ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி | Hyderabadi Murgh Dum Biryani in Tamil

எழுதியவர் Bobby Kochar  |  11th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Hyderabadi Murgh Dum Biryani by Bobby Kochar at BetterButter
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணிBobby Kochar
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

4430

0

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி recipe

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Hyderabadi Murgh Dum Biryani in Tamil )

 • 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டைத் தூள்
 • 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
 • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 1/2 தேக்கரண்டி ஜாதிக்காய் மேலோட்டுத்தூள்
 • 1/2 தேக்கரண்டி துருவப்பட்ட ஜாதிக்காய்
 • 1 தேக்கரண்டி சிக்கன் மசாலா
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி நாட்டு மிளகாய்/காஷ்மீர் சிவப்பு மிளகாய்த்தூள்
 • 3/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • மேரினேட் செய்வதற்கு:1/2 கிலோ தயிர், கடையப்பட்டது
 • 2-3 பச்சை ஏலக்காய்
 • 2-3 கிராம்பு
 • பன்னீர் தண்ணீர் சில துளிகள்
 • 1/2 கப் வெந்நீர்
 • கொஞ்சம் குங்குமப்பூத் தாள்கள்
 • 1/2 கப் கொத்துமல்லி, நறுக்கியது
 • 1/2 கப் புதினா நறுக்கியது
 • 4 வெங்காயத் துண்டுகள்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 இலவங்கப்பட்டை
 • 1 பிரிஞ்சி இலை
 • 1/2 கிலோ வெங்காயத் துண்டுகள் வறுத்தது
 • 1 கிலோ பாஸ்மதி பிரியாணி அரிசி
 • 1 கிலோ சிக்கன் எலும்போடு

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி | How to make Hyderabadi Murgh Dum Biryani in Tamil

 1. 1: அரை மணி நேரத்திற்குத் தண்ணீரில் அரிசியை ஊறவைக்கவும்.
 2. 2: சிக்கன் துண்டுகளைச் சுத்தப்படுத்திக் கழுவவும்.
 3. 3: மேரினேட் செய்வதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தயிர் மற்றும் மசாலாவில் சிக்கன் துண்டுகளை குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 4. 4. வெங்காயத் துண்டுகளை வறுத்துக்கொள்ளவும்.
 5. 5: குங்குமப்பூவை சூடான பாலில் ஊறவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 6. 6: ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
 7. 7: 1 பிரிஞ்சி இலை, 1 இலவங்கப்பட்டை 1 தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும்
 8. 8: வெடிக்கும்போது, வெங்காயத் துண்டுகள் சேர்த்து அவை பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
 9. 9: சிக்கன் துண்டுகளைச் சேர்த்து அரைவேக்காட்டிற்கு வேகவைக்கவும்.
 10. 10. அரிசியை உப்புத் தண்ணீரில் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காயுடன் கொதிக்கவிடவும்.
 11. 11. அடுப்பிலிருந்து இறக்கி அவை 3/4பாகம் தயாரானதும் வடிக்கட்டிக்கொள்ளவும். சற்றே கிளரிக்கொள்ளவும்.
 12. 12: ஒரு கனமாகஅடிப்பாக பாத்திரத்தில், சிக்கனைக் குழம்புடன் ஒரு அடக்குப் பரவச் செய்து ஒரு அடுக்கு சாதத்தை வைக்கவும். பன்னீர் தண்ணீரை, குங்குமப்பூ பாலைத் தெளித்து வறுத்த வெங்காயத்தில் 1/2 சேர்க்கவும். புதினாவையும் கொத்துமல்லியையும் சேர்க்கவும்.
 13. 13: மீண்டும் மீதமுள்ள சாதம் மற்றும் சிக்கனுக்கு இப்படியே செய்யவும்.
 14. 14: இறுக்கமாக மூடியால் மூடி கோதுமை மாவினால் சீல் செய்யவும்.
 15. 15: சூடானத் தவாவில் வைத்து சிறு தீயில்/தம்மில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 16. 16: 10 நிமிடங்களுக்கு இருக்கட்டும், அதன்பிறகு மூடியைத் திறக்கவும்.
 17. 17: குழம்பு வெங்காய வளையங்களோடு பரிமாறவும்.

Reviews for Hyderabadi Murgh Dum Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.