வீடு / சமையல் குறிப்பு / மொறுமொறுப்பான சோள பருப்புகள்

Photo of Crispy Corn Kernels by Anjana Chaturvedi at BetterButter
13731
315
4.7(0)
0

மொறுமொறுப்பான சோள பருப்புகள்

Jul-29-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் சோள பருப்புகள்
  2. 2.5 தேக்கரண்டி அரிசி மாவு
  3. 2 தேக்கரண்டி சோள மாவு
  4. 1/3 தேக்கரண்டி மிளகு தூள்
  5. கலக்கி வறுப்பதற்கு -
  6. 2.5 தேக்கரண்டி குடமிளகாய் பொடியாக நறுக்கியது
  7. 2.5 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி நறுக்கியது
  8. 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் நறுக்கியது
  9. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  10. 1.5 தேக்கரண்டி வெனிகர்
  11. ஒரு சிட்டிகை மிளகுத்தூள்

வழிமுறைகள்

  1. டின்னில் அடைக்கப்பட்டச் சோளத்தில் இருந்து தண்ணீரை வடிக்கட்டவும். ஒரு பாத்திரத்தை எடுத்து சோள பருப்புகளை உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  2. அரிசி மாவு கடலை மாவை அதன் மீது தூவி மீண்டும் கலந்து (தண்ணீர் சேர்க்கவேண்டாம்) ஒரு நிமிடத்திற்கு விட்டு வைக்கவும்.
  3. ஆழமான அகலமான கடாயில் பொரிப்பதற்காகப் போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தவும். கையளவு சோளத்தைச் சூடான எண்ணெயில் சேர்க்கவும்.
  4. ஒருமுறை கலக்கி பொரிக்கவும். வெடிக்க ஆரம்பித்ததும் கடாயை ஓரளவிற்கு மூடவும். சோளம் மொறுமொறுப்பாக மாறியதும் கடாயில் மிதக்க ஆரம்பிக்கும்.
  5. வெந்ததும் கடாயிலிருந்து எடுக்கவும். ஒரு நாப்கின் தாளினால் கூடுதல் எண்ணெயை உறிஞ்சி எடுக்கவும்.
  6. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்துக. நறுக்கிய பச்சை மிளகாய், குடமிளகாயைச் சேர்த்து சில நொடிகள் கலந்து வறுக்கவும். புதிய கொத்துமல்லி, சோயா, வெனிகர், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.
  7. இப்போது வறுத்த சோளத்தைச் சேர்த்து முறையாக கலந்துகொள்ளவும். உடனே பரிமாறி மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்