வீடு / சமையல் குறிப்பு / Butter prawn

Photo of Butter prawn by Nur Aishah Vimala at BetterButter
1
12
4.8(4)
0

Butter prawn

Mar-03-2018
Nur Aishah Vimala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • మీడియం/మధ్యస్థ
 • ప్రతి రోజు
 • చైనీస్
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. இறால் 500 கிராம்
 2. விருப்பப்பட்டால் முட்டை மஞ்சள் கரு 2
 3. வெண்ணெய் 2 மே. கரண்டி
 4. பால் 1/2 கப்
 5. பூண்டு 5 பற்கள்
 6. ப. மிளகாய் 5
 7. கறிவேப்பிலை 3 இணுக்கு
 8. மிளகுத்தூள் 1 தே. கரண்டி
 9. உப்பு தே. அளவு

வழிமுறைகள்

 1. இறால் தலையில் முட்களை வெட்டி, பின்னால் கீறி சுத்தம் செய்து கொள்ளுங்கள். / உங்கள் விருப்பம்போல் தோலை நீக்கி சுத்தம் செய்துகொள்ளலாம்.
 2. முட்டை மஞ்சள் கருவை அடித்துக்கொள்ளவும்
 3. வாணலியில் 1/2 கப் எண்ணெய், 1 மே. கரண்டி வெண்ணெய் போட்டு உருக்கி சூடேறியதும் குழம்பு கரண்டியால் வட்டமாக எண்ணெயை சுற்றவும்
 4. இடது கையால் முட்டையை உயரமாக தூக்கிப் பிடித்து மெதுவாக எண்ணெயில் ஊற்ற, வலது கையில் கரண்டியால் வட்டமாக கிளறி வேக வைக்கவும்
 5. பொன்னிறமாக வந்ததும் எடுத்து எண்ணெயை வடிகட்டிக்கொள்ளவும்
 6. இறாலை உப்பு, 1/2 தே. கரண்டி மிளகுத்தூள் போட்டு எண்ணெயில் லேசாக நிறம் மாறும் வறை வதக்கி எடுக்கவும்
 7. இறால் பொரித்த எண்ணெயை அப்புறப்படுத்தி அதே வாணலியில் 1 மே. கரண்டி வெண்ணெயில் பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் பாலை சேர்க்கவும்
 8. பால் கொதித்தவுடன் இறால், 1/2 தே. கரண்டி மிளகுத்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்
 9. பால், வெண்ணெய் நன்றாக இறாலில் ஊறி சுண்டி வந்ததும் முட்டை பொரியை தூவி பறிமாறலாம். அல்லது அப்படியே கூட பறிமாறலாம்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Priscilla Vijay
Mar-20-2018
Priscilla Vijay   Mar-20-2018

Different

Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்