வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் செய்த கோவா குலோப் ஜாமுன்

Photo of Home made kova gulab jamun by T.n. Lalitha at BetterButter
381
7
0.0(0)
0

வீட்டில் செய்த கோவா குலோப் ஜாமுன்

Mar-05-2018
T.n. Lalitha
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வீட்டில் செய்த கோவா குலோப் ஜாமுன் செய்முறை பற்றி

பாலில் செய்த குலோப் ஜாமுன்

செய்முறை டாக்ஸ்

 • ஹோலி
 • வெஜ்
 • ஈஸி
 • நார்த் இந்தியன்
 • பான் பிரை
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. பால் - 6 குவளைகள்
 2. சர்க்கரை - 2 குவளைகள் (குறைத்து, அதிகரித்து கொள்ளலாம்
 3. எண்ணய் - 3 குவளை
 4. நெய் - 1 தேக்கரண்டி
 5. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
 6. பாதாம் - 2 (அ) 3
 7. குங்குமப்பூ - சிறிதளவு

வழிமுறைகள்

 1. ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றவும். பாலை நன்றாக காய்ச்சவும்.
 2. மேலே பரவும் ஆடைகளை அவ்வபொழுது நீக்கி விடவேண்டும். தொடர்ந்து அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கட்டியாக பாத்திரத்தின் ஓரத்தில் சேரும் பால் திரவத்தை ஒட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
 3. பால் மணலை போன்று மாறுவதைக் காணலாம். இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஐம்பது நிமிடத்திற்கு பிறகு பால் முழுவதுமாக அரை திரவமாக மாறும்.  நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு,  பாத்திரத்தில் ஒட்டாமல், கைகளால் உருட்டும் பதத்தில் பால் திரவம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பதமான பால் கோவா தயார். 
 4. கோவா குலோப் ஜாமுன்கள் செய்யும் முறை முதலில் தயார் செய்து வைத்துள்ள கோயா மாவில் வெதுவெதுப்பான பாலைத் தெளித்து மிருதுவாக பிசையவும். 1 மணி நேரம் ஊற வைத்து பிறகு சிறு சிறு உருண்டைகளாக அழுத்தாமல் பிடித்து கொள்ளவும்.
 5. சர்க்கரையை பாத்திரத்தில் கொட்டி சரி சமம் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 6.  சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய் பொடி (அ) ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ  சிறிதளவு சேர்க்கவும்.
 7. பிடித்து வைத்த உருண்டைகளை லேசான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 8. பொன்னறிமாக பொரித்து எடுத்து வடிக்கட்டியில் இடவும்
 9. பிறகு சர்க்கரை கரைசலில் சேர்க்கவும். இரண்டு மணிநேரம் நன்றாக ஊறிய பின் பறிமாறவும். பாதாம் வைத்து அலங்காரம் செய்யலாம்.
 10. பாதாம் வைத்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்