ஷாகி தட்கா/துக்ரா - ராயல்பிரெட் புட்டிங் | Shahi Tukda/Shahi Tukra - Royal Bread Pudding in Tamil

எழுதியவர் Priya Suresh  |  18th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Shahi Tukda/Shahi Tukra - Royal Bread Pudding by Priya Suresh at BetterButter
ஷாகி தட்கா/துக்ரா - ராயல்பிரெட் புட்டிங்Priya Suresh
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

1255

0

ஷாகி தட்கா/துக்ரா - ராயல்பிரெட் புட்டிங் recipe

ஷாகி தட்கா/துக்ரா - ராயல்பிரெட் புட்டிங் தேவையான பொருட்கள் ( Ingredients to make Shahi Tukda/Shahi Tukra - Royal Bread Pudding in Tamil )

 • நறுக்கிய பருப்புக் கலவை (பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்பு)
 • 2 ஏலக்காய் (நசுக்கியது)
 • 2 தேக்கரண்டி சர்க்கரை
 • 3 கப் முழு பால்
 • ராப்ரி/ராப்டிக்கு:
 • கொஞ்சம் குங்குமப்பூத் தாள்கள்
 • 2 ஏலக்காய் (நசுக்கியது)
 • 1/3 கப் சர்க்கரை
 • 1/3 கப் தண்ணீர்
 • சர்க்கரை பாகு:
 • 1/2 கப் நெய் (பொரிப்பதற்கு)
 • 5 பிரெட் துண்டுகள்

ஷாகி தட்கா/துக்ரா - ராயல்பிரெட் புட்டிங் செய்வது எப்படி | How to make Shahi Tukda/Shahi Tukra - Royal Bread Pudding in Tamil

 1. தண்ணீரையும் சர்க்கரையையும் கடாயில் சூடுபடுத்தி குங்குமப்பூத் தாள்களை தண்ணீர் கொதிக்கும்போது போடவும். சர்க்கரைப் பாகு சற்றே அடர்த்தியானதும், அடுப்பை நிறுத்தி, எடுத்து வைக்கவும்.
 2. இன்னொரு கடாயில், பாலை மிதமானச் சூட்டில் பால் 1/4 பங்காக அதன் அசல் அளவில் இருந்து குறையும்போது கொதிக்கவைக்கவும்.
 3. தொடர்ந்து கலக்க மறக்கவேண்டாம், பால் குறைந்ததும், ஏலக்காய்த் தூள், சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தோடர்ந்து கலக்கிக்கொண்டே சூடுபடுத்துவதை மேலும் 5 நிமிடங்கள் தொடரவும்.
 4. அடுப்பிலிருந்து இறக்கி எடுத்து வைக்கவும். இப்போது பிரெட் துண்டுகளை எடுத்து பக்கங்களை வெட்டி முக்கோணமாக வெட்டிக்கொள்ளவும்.
 5. ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்தி பிரட்டின் பக்கங்கள் மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் பொரிக்கவும். பிரெட் துண்டுகள் வறுக்கப்பட்டதும், ஒவ்வொரு துண்டையும் சர்க்கரைப் பாகில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் ஊறவைக்கவும்.
 6. பரிமாறும் தட்டில் அடுக்கி, ராப்ரியை பிரட் துண்டுகளின் மீது உற்றி, நறுக்கிய பருப்புகளால் அலங்கறிக்கவும். சூடாகவே சில்லென்றோ பரிமாறவும், சில்லென்று பரிமாறினால் எனக்குப் பிடிக்கும் என்றாலும்.

Reviews for Shahi Tukda/Shahi Tukra - Royal Bread Pudding in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.