வீடு / சமையல் குறிப்பு / பனீர் மசாலா தோசை

Photo of Paneer masala dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
440
4
0.0(0)
0

பனீர் மசாலா தோசை

Mar-11-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் மசாலா தோசை செய்முறை பற்றி

எளிமையான டிபன் வெரைட்டி இது.எண்ணெய் இல்லாமல் மசாலா செய்து விட்டு தோசையில் வெண்ணெய் போட்டு பனீர் துருவல் தூவி எளிதில் இந்த பனீர் மசாலா தோசை செய்யலாம்.ஒருவருக்கு ஒரு தோசை வீதம் இரண்டு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு -2 குழம்பு கரண்டி
  2. வெண்ணெய் -2 தேக்கரண்டி
  3. பனீர் துருவியது -1/2 கப்
  4. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 2தேக்கரண்டி
  5. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  6. மசாலாவிற்கு தேவையானவை
  7. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், பச்ச பட்டாணி - 1கப்(எல்லா காய்களும் சேர்த்து)
  8. உப்பு -1/2 தேக்கரண்டி
  9. கரம்மசாலா --1/4 தேக்கரண்டி
  10. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  12. கடலைமாவு -1/2 தேக்கரண்டி
  13. தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மசாலாவிற்கு கொடுத்தவற்றை எல்லாம் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து மசித்துக்கொள்ளவும்
  2. தோசை கல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை லேசான தோசையாக வார்க்கவும்
  3. அதன் மேல் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் தடவவும்
  4. அதன் மேல் ஒரு புறத்தில் மசாலாவை ஸ்பிரட் செய்யவும்
  5. துருவிய பனீரை மசாலாவின் மேல் போட்டு கொத்தமல்லி இலையை தூவவும்.
  6. மறுபுறத்தை மூடி ஒரு முறை திருப்பி போட்டு எடுக்கவும்
  7. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்