வீடு / சமையல் குறிப்பு / எளிமையான பனீர் பட்டர் மசாலா

Photo of Simple Paneer Butter Masala by Banupriya Jawahar at BetterButter
336
4
0.0(0)
0

எளிமையான பனீர் பட்டர் மசாலா

Mar-12-2018
Banupriya Jawahar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எளிமையான பனீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

வீட்டிலேயே எளிய முறையில் பனீர்பட்டர் மசாலா செய்யும் முறை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பனீர் 200 கிராம்
  2. பெல்லாரி 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  6. கஷ்மீரி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. கசூரி மேத்தி 1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  9. பட்டர் 3 மேஜைக்கரண்டி
  10. பால்/ஃப்ரெஷ் க்ரீம் 1/4 கப்
  11. எண்ணைய் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை உரித்து 4 துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
  2. தக்காளியை வேக வைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைக்கவும்்
  3. கடாயில் பட்டர் விட்டு, வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை வாசனை நீங்கியதும் எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.
  5. உப்பு சேர்க்கவும்
  6. மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும் பால்/ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. வெட்டி வைத்துள்ள பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
  8. அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடத்தில் அணைக்கவும்.
  9. சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்