Photo of Steamed chocolate moist cake by Nur Aishah Vimala at BetterButter
459
8
0.0(1)
0

Steamed chocolate moist cake

Mar-12-2018
Nur Aishah Vimala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கேக் செய்ய:
  2. கோகோ பவுடர் 1 கப்
  3. பால் 1 கப்
  4. இனிப்பு கன்டென்ஸ்ட் பால் 1 கப்
  5. முட்டை 3
  6. சர்க்கரை 1 கப்
  7. எண்ணெய் 1 கப்
  8. மைதா மாவு 1 1/4 கப்
  9. சோடா உப்பு 1 தே. கரண்டி
  10. பேக்கிங் பவுடர் 1 தே. கரண்டி
  11. வெண்ணிலா எஸன்ஸ் 1 தே. கரண்டி
  12. டாப்பிங் செய்வதற்கு:
  13. கன்டென்ஸ்ட் பால் 2 மே. கரண்டி
  14. வெண்ணெய் 1 மே. கரண்டி
  15. பால் 1/4 கப்
  16. சமையல் சாக்லெட் (cooking chocolate) 100 கிராம்

வழிமுறைகள்

  1. கேக்குக்கு கொடுத்த பொருட்களில் மாவு, சோடா உப்பு, பேக்கிங் பவுடர் தவிற மற்ற எல்லாவற்றையும் பிளென்டரில் போட்டு 5 நிமிடங்களுக்கு அடித்துக்கொள்ளவும்
  2. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மாவு, சோடா, பேக்கிங் பவுடர் ஒன்றாக சலித்து சேர்த்து கலக்கவும்.
  3. கேக் கலவையை வடிகட்டி ஒரு பொருத்தமான பாத்திரத்தில் போடவும்
  4. அதை ஸ்டீம் செய்யும் போது தண்ணீர் புகாமல் இருக்க மூடிக்கொள்ளவும்
  5. ஸ்டீமரை நன்கு கொதிக்க வைத்து அதில் கேக் கலவையை மிதமான சூட்டில் ஏறக்குறைய 1 1/2 மணி நேரம் வேக வைக்கவும்.
  6. வெந்தவுடன் எடுத்து ஆற வைக்கவும்
  7. இப்பொழுது டாப்பிங்க்கு கொடுத்த பொருட்களை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு டபுள் பாய்லிங் செய்யவும். வாணலியில் நீரை கொதிக்க வைத்து அதன் மேல் சிறிய பாத்திரத்தை வைத்து கரையும் வரை கிளறவும்
  8. எல்லாம் கரைந்தவுடன் எடுத்து ஆற வைக்கவும்
  9. நன்றாக ஆறிய கேக்கை ஒரு தட்டில் தலை கீழாக திருப்பி வைக்கவும்
  10. அதன்மேல் டாப்பிங்கை ஊற்றி விரும்பியவற்றை போட்டு அலங்கரித்துக்கொள்ளுஙகள்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Mar-12-2018
Mohammed Abduallah   Mar-12-2018

Yumm

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்