வீடு / சமையல் குறிப்பு / கருப்பு உளுந்து கச்சொரி

Photo of Black urad dal Kachori by Saivardhini Badrinarayanan at BetterButter
295
3
0.0(0)
0

கருப்பு உளுந்து கச்சொரி

Mar-18-2018
Saivardhini Badrinarayanan
210 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பு உளுந்து கச்சொரி செய்முறை பற்றி

ஆரோக்கியமான கச்சொரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • குஜராத்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பு உளுந்து 1/2 கப்
  2. மைதா 1/4 கப்
  3. கோதுமை மாவு 1/4 கப்
  4. சோடா உப்பு 1/4 மேஜைக்கரண்டி
  5. சக்கரை 1/2 + 1/2 மேஜைக்கரண்டி
  6. நெய் 1 + 2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி நறுக்கியது 1 மேஜைக்கரண்டி
  8. பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  9. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  10. மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
  11. சோம்பு தூள் 1 மேஜைக்கரண்டி
  12. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  13. உப்பு
  14. பெருங்காயத்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  15. எண்ணெய் பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் மைதா , கோதுமை மாவு, சோடா உப்பு , சக்கரை, உப்பு, நெய் தேவையானயளவு தண்ணீர் சேர்ர்த்து நன்கு மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (அரை மணி நேரம் ஊறவைக்கவும்).
  2. கருப்பு உளுந்தை 3 மணி நேரம் உறவைக்கவும்.
  3. மூன்று மணி நேரம் கழித்து நன்கு தண்ணீரை வடிகட்டி கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்ர்த்து நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. பின் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஜீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  6. பின் அதில் அரைத்த உளுந்து விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். (வதக்கி இறக்கிவைக்கவும்)
  7. பின் அரை மணி நேரம் கழித்து பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து வடை போல் அழுத்தி நடுவில் வதக்கிய உளுந்து புராணம் வைத்து உருண்டைகளாக செய்து மறுபடியும் மெதுவாக வடை போல் தட்டி கொள்ளவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒவொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்