வீடு / சமையல் குறிப்பு / பூரணம் அடைக்கப்பட்ட டோனட்ஸ்

Photo of Stuffed donuts by Saranya Manickam at BetterButter
218
4
0.0(0)
0

பூரணம் அடைக்கப்பட்ட டோனட்ஸ்

Mar-21-2018
Saranya Manickam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பூரணம் அடைக்கப்பட்ட டோனட்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த டோனட்ஸ் வீட்டில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சாக்கலேட்டு குக்கீஸ் 10
  2. கண்டன்ஸ்ட் (condensed) பால் 2 மேஜைக்கரண்டி
  3. மைதா 1/2 கப்
  4. பொடித்த சர்க்கரை 2 தேக்கரண்டி
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. வெள்ளை சாக்கலேட்டு 4 மேஜைக்கரண்டி
  7. உருக்கிய வெண்ணெய் 50 மில்லி
  8. பால் 120 மில்லி
  9. உப்பு 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கீஸ் பொடித்துக்கொள்ளவும்.
  2. பொடித்த குக்கீஸ் பொடியுடன், கண்டன்ஸ்ட் பால் சேர்க்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு, சர்க்கரை சேர்ந்து கலக்கவும்
  4. அத்துடன் வெண்ணெய் சேர்க்கவும்
  5. பால் சிறிது சிறிதாக சேர்த்து, திடமான சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  6. மாவை சிறு உருண்டைகளாக்கி , அதனுள் பிஸ்கட் கலவையை வைத்து, உருண்டைகளாக்கவும்
  7. வாணலியில் எண்ணெய் சூடாக்கி, டோனட்ஸ் உருண்டைகளை மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  8. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதன் மேல் மற்றொரு பாத்திரம் வைத்து, அதில் வெள்ளை சாக்கலேட்டு சேர்த்து உருகவைக்கவும்
  9. உருகிய சாக்கலேட்டு ஐ டோனட்ஸ் மேல் ஊற்றி, சிறிது பொடித்த பிஸ்கட் கலவையை மேலே வைத்து , ஆறவிடவும்.
  10. அறிய பின்பு சுவைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்