வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் சப்ஜி

Photo of SweetCorn Sabzji by Saivardhini Badrinarayanan at BetterButter
239
3
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் சப்ஜி

Mar-21-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் சப்ஜி செய்முறை பற்றி

சுவையான கார்ன் சப்ஜி சப்பாத்தி, தோசை எல்லா வகை உணவுகளுக்கு நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கார்ன் 1 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  5. பட்டை சிறியது
  6. கிராம்பு 2
  7. பிரியாணி இலை சிறியது
  8. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  9. கொத்துமல்லி இலை சிறிதளவு
  10. உப்பு
  11. நெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஸ்வீட் கார்னை 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு வாணலியில் நெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  4. பின் அதில் தக்காளி , மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் வேகவைத்த கார்ன் சேர்த்து வதக்கவும்.
  6. இறுதியாக கொத்துமல்லி இலை சேர்த்து சப்பாத்தி அல்லது தோசை உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்