பீட்ரூட் ஆனியன் மசாலா சப்பாத்தி | Beetroot onion masala chapathi in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  1st Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Beetroot onion masala chapathi recipe in Tamil,பீட்ரூட் ஆனியன் மசாலா சப்பாத்தி, Krishnasamy Vidya Valli
பீட்ரூட் ஆனியன் மசாலா சப்பாத்திKrishnasamy Vidya Valli
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

12

0

பீட்ரூட் ஆனியன் மசாலா சப்பாத்தி recipe

பீட்ரூட் ஆனியன் மசாலா சப்பாத்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Beetroot onion masala chapathi in Tamil )

 • பீட்ரூட் துருவியது -1/2 கப்
 • வெங்காயம் -1 பெரியது
 • கோதுமை மாவு -1 கப்
 • உப்பு -3/4 தேக்கரண்டி
 • காஷ்மீர் சில்லி பவுடர் -3/4 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி -4 சிட்டிகை
 • தனியா பொடி -1/2 தேக்கரண்டி
 • சீரகப்பொடி -1/2 தேக்கரண்டி
 • கரம்மசாலா -1/2 பொடி
 • ஆம்சூர் பவுடர் -1/2 தேக்கரண்டி
 • பெருங்காயம் -4 சிட்டிகை
 • கான் பிளவர் -2 தேக்கரண்டி
 • கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
 • சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய்/நெய்
 • தாளிக்க
 • எண்ணெய் -1 தேக்கரண்டி
 • சீரகம் -1/4 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி

பீட்ரூட் ஆனியன் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி | How to make Beetroot onion masala chapathi in Tamil

 1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பச்ச வாசனை போனவுடன் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
 2. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
 3. கான்பிளவர் தூவி இறக்கி கோதுமை மாவு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
 4. உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக இட்டு தோசைகல்லில் எண்ணெய்/நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
 5. ஏதாவது தயிர் சாலட் உடன் பறிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் கேரட்/முள்ளங்கி சேர்க்கலாம்

Reviews for Beetroot onion masala chapathi in tamil (0)