சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டா | Chicken Basil Frittatta in Tamil

எழுதியவர் Munsila Fathima  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chicken Basil Frittatta by Munsila Fathima at BetterButter
சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டாMunsila Fathima
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3

0

சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டா recipe

சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken Basil Frittatta in Tamil )

  • முட்டை - 4
  • தேங்காய் - 4 துண்டுகள்
  • பேசில் இலை - கையளவு
  • சிக்கன் - 100gm எலும்பு இல்லாத
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • கேபாப் மசாலா - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - பின்ச்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • நறுக்கிய குடை மிளகாய் கொஞ்சம்
  • (மஞ்சள், சிவப்பு)
  • உப்பு- தேவைக்கு
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பட்டர் , சீஸ், சில்லி பிளக்ஸ் தேவைக்கு

சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டா செய்வது எப்படி | How to make Chicken Basil Frittatta in Tamil

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. அதனுடன் சிக்கன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், கேபாப் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் தண்ணீர் நன்கு வற்றும் அளவு வதக்கி கொள்ளவும்.
  3. அதே சமயம் முட்டையுடன் உப்பு, கட்டி தேங்காய் பால், சில்லி பிளக்ஸ் சேர்த்து நன்கு அடித்து கொள்ளுங்கள்.
  4. வதங்கிய சிக்கனுடன் பட்டர், பேசில் இலை, குடை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  5. வதக்கிய பின் முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கி பேக்கிங் டின் இல் ஊற்றி குக்கரில் பேக் செய்யவும். ஊற்றும் முன் டின் இல் பட்டர் தடவி கொள்ளுங்கள்.
  6. ஓவெனிலும் ப்ரீ ஹீட் செய்து பேக் செய்யலாம்.
  7. பேக் ஆனதா என்று டூத் பிக்கினால் குத்தி பாருங்கள்.
  8. கிளீன் ஆக வந்தால் ரெடி என்று அர்த்தம்.

எனது டிப்:

தேங்காய் பாலுக்கு பதில் கிரீம் அல்லது பால் சேர்க்கலாம்.

Reviews for Chicken Basil Frittatta in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.