Photo of Finger Millet Idiyappam by Juvaireya R at BetterButter
522
10
0.0(2)
0

Finger Millet Idiyappam

Apr-04-2018
Juvaireya R
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Finger Millet Idiyappam செய்முறை பற்றி

காலை உணவு என்பது மிக முக்கியமான ஒன்று எனவே நாம் அவ்வுணவை சத்துள்ளதாகவும் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்கவும் நாம் அவசியம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.அதனால் நான் இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கேழ்வரகு -2 கோப்பை
  2. அரிசிமாவு -2 கோப்பை
  3. தண்ணீர் - தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 1 கோப்பை தேங்காய் துருவல்
  6. தேவையான அளவு சர்க்கரை

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் 2 கோப்பை அரிசி மாவு எடுத்துக்கொள்ளவும்.
  2. அதே பாத்திரத்தில் 2 கோப்பை கேழ்வரகு எடுத்துக்கொள்ளவும்.
  3. இரண்டையும் கலந்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
  5. அத்தண்ணீரை மாவில் போட்டு மரத்துடுப்பு/கரண்டியால் கிளறவும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றவும்.
  6. நன்கு கிளறி மாவை தயார் செய்யவும்
  7. பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  8. மாவை இடியாப்ப உரலில் போடவும்.
  9. இதன் பெயர் ஒலைத்தட்டு தட்டில் ஒட்டாமல் வரும் இடியாப்பம்.
  10. அதனை ஓலைத் தட்டில் பிழியவும்.
  11. பின் இட்லி பாத்திரத்தில் இத்தட்டுக்களை வைத்து 5-7 நிமிடம் வேகவைக்கவும்.
  12. இடியாப்பத்தை தொட்டு பார்க்கவும் கையில் ஒட்டாமல் இருந்தால் வேந்துவிட்டது.
  13. பின் பாத்திரத்திற்க்கு மாற்றவும்.
  14. மிகவும் சத்தான மற்றும் சுவையான கேழ்வரகு இடியாப்பம் தயார். பால்,சர்க்கரை, தேங்காய் துருவல்,வாழைப்பழம் என அனைத்தையும் வைத்து பரிமாறலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

Healthy

Waheetha Azarudeen
Apr-07-2018
Waheetha Azarudeen   Apr-07-2018

செம்ம டியர்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்