வீடு / சமையல் குறிப்பு / 2 இன் 1 இனிப்பு & உப்பு பிஸ்கட் - வீட்டுத் தயாரிப்பு மைதாவில்

388
3
0.0(0)
0

2 இன் 1 இனிப்பு & உப்பு பிஸ்கட் - வீட்டுத் தயாரிப்பு மைதாவில்

Apr-11-2018
Happy Home Maker-Tamil
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

2 இன் 1 இனிப்பு & உப்பு பிஸ்கட் - வீட்டுத் தயாரிப்பு மைதாவில் செய்முறை பற்றி

A simple quick to make savoury and sweet snack with healthy homemade maida.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வீட்டில் தயாரித்த மைதா - 1 கப்
  2. உப்பு - சுவைக்கு
  3. தண்ணீர் - 1/3 கப்
  4. எண்ணைய் - 1 தேக்கரண்டி + பொரிப்பதற்க்கு
  5. மிளகு பொடி - 1/2 தேக்கரண்டி
  6. சீரகப்பொடி - 1/4 தேக்கரண்டி
  7. கறுப்பு உப்பு - 2 சிட்டிகை
  8. கோகோ பொடி - 2 தேக்கரண்டி
  9. ஐசிங் சர்க்கரை - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உடைத்த கோதுமையை 1.5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பால் பிழிந்து 1 மணி நேரம் தெளிய விடவும்
  3. மேலே உள்ள தண்ணீரை ஊற்றி விட்டு, கீழே உள்ள பகுதியை ஒரு தட்டில் காய வைக்கவும்.
  4. காய்ந்ததும் பொடித்து சலித்து வைத்துக்கொண்டால் வீட்டு தயாரிப்பு மைதா கிடைக்கும்
  5. ஓரு கப் மைதாவுடன் எண்ணைய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
  6. சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் இடவும்.
  7. கத்தியால் விருப்பமான வடிவில் வெட்டி எண்ணையில் பொறிக்கவும்.
  8. கறுப்பு உப்பு, மிளகு சீரக பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்.
  9. இனிப்பு பிஸ்கட் செய்ய கோகோ பொடி, ஐசிங் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்