BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Curd Vada

Photo of Curd Vada by Saivardhini Badrinarayanan at BetterButter
0
2
0(0)
0

தயிர் வடை

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தயிர் வடை செய்முறை பற்றி

சுவையான தயிர் வடை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து 1 கப்
  2. தயிர் 2 கப்
  3. வெங்காயம் 1
  4. மிளகு 1 மேஜைக்கரண்டி
  5. அரிசி மாவு 2 மேஜைக்கரண்டி
  6. கேரட் துருவல் 1/2 கப்
  7. கொத்துமல்லி இலை
  8. பச்சைமிளகாய் 2
  9. பூந்தி 1/4 கப்
  10. மிளகாய் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  11. உப்பு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் கெட்டியாக மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் அரைத்த உளுந்து மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகு, கருவேப்பிலை , அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து வடை போல் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  6. பின் ஒரு தட்டில் வடை வைத்து பீட் செய்த தயிர் சேர்த்து அதன் மேல் கேரட் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பூந்தி தூவவும்.
  7. பின் மிளகாய் தூள் 1 சிட்டிகை மேலே தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்