வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மசாலா

Photo of Potato Masala by Bhavani Shivaram at BetterButter
352
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு மசாலா

Apr-25-2018
Bhavani Shivaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மசாலா செய்முறை பற்றி

சுவையான எளிமையான உருளைக்கிழங்கு மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 2
  2. சின்ன வெங்காயம் - 15
  3. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  5. இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
  6. கருவேப்பிலை - சிறிது
  7. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. நறுக்கிய துண்டுகளுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
  3. சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கருவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  5. வெங்காயம் வதங்கியதும், மசாலா கலவையுடன் சேர்ந்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்.
  6. உருளைக்கிழங்கில் இருந்து எண்ணெய் பிரித்து வரும் வரை காத்திருக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்