வீடு / சமையல் குறிப்பு / பப்பாளி பால்கோவா இனிப்பு சுருள்கள்

Photo of Papaya Khoa Sweet Rolls by Vins Raj at BetterButter
3127
2
0.0(0)
0

பப்பாளி பால்கோவா இனிப்பு சுருள்கள்

May-08-2018
Vins Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பப்பாளி பால்கோவா இனிப்பு சுருள்கள் செய்முறை பற்றி

பப்பாளி காயில் சுருள்கள் செய்து பால்கோவாவை பூரணமாக வைத்து செய்ய படும் ஒரு இனிப்பாகும். தனி சுவையுடன் இருக்கும் இனிப்பு அனைவருக்கும் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பப்பாளி காய் - 50 கிராம்
  2. இனிப்புட்ட பட்ட பால்கோவா - 75 கிராம்
  3. முந்திரி - 15 கிராம்
  4. 1/4 தே க ஏலக்காய் பொடி
  5. ஆரஞ்சு வண்ண உணவு தூள் - ஒரு சிட்டிகை
  6. நெய் - 1 மே.க

வழிமுறைகள்

  1. பப்பாளியை காயை தோல் நீக்கி, தோல் உரிக்கும் கத்தியை கொண்டு மெல்லிய தாள் போல் சீவிக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீருடன் சக்கரை கலந்து கொதிக்க விடவும். உணவு வண்ண துளை சேர்க்கவும்.
  3. கொதி வந்தவுடன் பப்பாளி தாள்களை அதில் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  4. வெந்தவுடன் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். தாள்கள் மிகவும் மெலிதாக இருப்பதால் சற்று கவனத்துடன் தனித்தனியா வைக்கவும்
  5. முந்திரி பருப்பை சிறிய துண்டாக உடைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி அதில் முந்திரி பருப்பை வறுத்துக்கொள்ளவும்
  6. வறுபட்டவுடன் அதில் பால்கோவாவை சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடத்துக்கு கிளறவும். பால்கோவா இளகிவிடும். அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஏலக்காய் பொடியை தூவி கலக்கவும்.
  7. சூடு ஆறியபின் பால்கோவாவை சிறிய உருளைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  8. இப்பொழுது சுருள் செய்யவேண்டும். ஒரு பப்பாளி தாளை எடுத்து ஒரு ஓரத்தில் பால்கோவாவை உருளைகளை வைத்து முழு நீளத்துக்கும் சுருட்டவேண்டும்.
  9. . இதை போல மற்ற தாள்களில் பால்கோவாவை வைத்து சுருள்கள் சுருட்டை வேண்டும். சுவைமிக்க பப்பாளி பால்கோவா சுருள்கள் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்