வீடு / சமையல் குறிப்பு / பீநட் பட்டர்-ஆப்பிள் கோப்ளர்

Photo of Peanut Butter-Apple Cobbler by Ayesha Ziana at BetterButter
411
3
0.0(0)
0

பீநட் பட்டர்-ஆப்பிள் கோப்ளர்

May-08-2018
Ayesha Ziana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீநட் பட்டர்-ஆப்பிள் கோப்ளர் செய்முறை பற்றி

கோப்ளர் பிரஞ்சு நாட்டின் பிரபலமான டெசர்ட் ரெசிபி. அதில் ஆப்பிள், பீநட் பட்டர் இவற்றை வைத்து செய்தது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உப்பில்லாத வெண்ணெய் 60 கிராம் + டின்னில் தடவ
  2. பில்லிங் செய்ய: ஆப்பிள் 1
  3. சீனி 1/8 கப்
  4. கோதுமை மாவு 1/8 கப்
  5. வெனிலா எஸ்ஸென்ஸ் 1/2 ஸ்பூன்
  6. பட்டைத்தூள் 1/2 ஸ்பூன்
  7. உப்பு ஒரு பின்ச்
  8. பால் 1/4 கப்
  9. டாப்பிங் செய்ய: கோதுமை மாவு 1/2 கப்
  10. சீனி 1/2 கப்
  11. பால் 1/3 கப்
  12. க்ரீமி பீநட் பட்டர் 30 கிராம்
  13. உப்பு ஒரு பின்ச்
  14. பேக்கிங் பவுடர் 3/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பில்லிங் செய்ய: ஆப்பிளைத் தோலுரித்து ஸ்லைஸ் செய்து ஒரு பவுலில் போடவும். மற்ற பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. டாப்பிங் செய்ய: கொடுத்துள்ள பொருட்களை இன்னொரு பவுலில் கலந்து வைக்கவும்.
  3. பேக்கிங் டின்னில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். 60 கிராம் வெண்ணெயை ஒரு சிறிய பேனில் உருக வைத்து அதை பேக்கிங் டின்னில் ஊற்றவும்.
  4. பின்னர், பில்லிங் கலவையை ஊற்றவும். அதன் பின் டாப்பிங் கலவையை ஊற்றவும். கலக்கக் கூடாது.
  5. பின்னர், முற்சூடு செய்யப்பட்ட பிரஷர் குக்கர் அல்லது அவனில் டின்னை வைத்து 1 மணி நேரம் பேக் செய்யவும்.
  6. பரிமாறும் போது ஒரு ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம் உடன் வைக்கலாம்.
  7. சூப்பர் சுவையில் கோப்ளர் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்