வீடு / சமையல் குறிப்பு / Restaurant style broasted leg piece

Photo of Restaurant style broasted leg piece by Nancy Samson at BetterButter
395
4
0.0(1)
0

Restaurant style broasted leg piece

May-10-2018
Nancy Samson
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஏர்ஃப்ரையிங்
  • மைக்ரோவேவிங்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி இறைச்சி கால் பகுதி எலுும்போடு - 1/2 கிலோ
  2. முட்டை - 2
  3. பால் - 2 மேசைக்கரண்டி
  4. மைதா மாவு - 2 கப்
  5. பூண்டு தூள் (அ) விழுது - 2 தேக்கரண்டி
  6. வெங்காய தூள் (அ) விழுது - 3 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  9. பிரெட் தூள் - 4 மேசைக்கரண்டி
  10. நொறுக்கிய ஓட்ஸ் - 4 மேசைக்கரண்டி
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு
  12. உப்பு - தேவையான அளவு
  13. ஊறவைக்க :
  14. எலுமிச்சை சாறு - ஒரு பழத்தின் சாறு
  15. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  16. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  17. உப்பு - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. 1. கோழி இறைச்சியை நன்கு கழுவு சுத்தம் செய்து, ஒரு காகித டவல அல்லது ஒரு சுத்தமான காட்டன் டவல் மேல் வைத்து நீரை வடியவிடவும்.
  2. 2. ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்து , சுத்தம் செய்த இறைச்சியை அதில் நன்கு தோய்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  3. 3. ஒரு கப்பில் முட்டையை உடைத்து அதில் பால் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். இதை தனியே வைக்கவும்.
  4. 4. ஒரு ஈரமில்லாத தட்டில், மைதா, பூண்டு தூள், வெங்காய தூள், மிளகாய் தூள், மிளகு தூள், பிரெட் தூள் , ஓட்ஸ், உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  5. 5. ஊறவைத்த இறைச்சியை முதலில் தட்டில் உள்ள தூளில் நன்கு தோய்த்து பின்னர் முட்டை பால் கலவையில் மெதுவாக தோய்த்து, பின் இன்னொரு முறை தட்டில் உள்ள தூளில் தோய்க்கவும்.
  6. 6. இறைச்சியின் அனைத்து பகுதிகளிலும் மசாலா கலவை ஓட்டி இருக்குமாறு தோய்த்து கொள்ளவும். இறைச்சியை லேசாக உதறி அதிக மசாலாவை உதிர்த்து சரி செய்யவும்.
  7. 7. ஒவ்வொரு இறைச்சி துண்டுகளையும் இதேபோல் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
  8. 8. ஒரு வானொலியில் பொறிப்பதர்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிதமான தீயில் கவனமாக இறைச்சியை பொரித்து எடுக்கவும்.
  9. 9. மசாலா உதிராமல இருக்க திருப்பும் போது கவனமாக பொறுமையாக கையாள வேண்டும்.
  10. 10. நுண்ணலை அடுப்பில் வைத்தும் பொறிக்கலாம்.
  11. 10. இறைச்சி வெந்ததும் சூடாக மையோனைஸ் அல்லது தக்காளி சாஸ் அல்லது சாணவிச் சாஸ் உடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-10-2018
Pushpa Taroor   May-10-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்