வீடு / சமையல் குறிப்பு / உணவக முறையில் பொரிச்ச கோழி

Photo of Restaurant style chicken kebab by Nancy Samson at BetterButter
735
2
0.0(0)
0

உணவக முறையில் பொரிச்ச கோழி

May-12-2018
Nancy Samson
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உணவக முறையில் பொரிச்ச கோழி செய்முறை பற்றி

உணவகங்களில் செய்யும் கபாப் இனி வீட்டிலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி இறைச்சி - 1/4 கிலோ
  2. முட்டை -1
  3. சோள மாவு - 2 தேக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  6. தனியா தூள் - 1 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. கெட்டி தயிர் - 2 தேக்கரண்டி
  10. எலுமிச்சை சாறு
  11. உப்பு - தேவையான அளவு
  12. எண்ணெய் - பொரிப்பதற்கு
  13. கறிவேப்பிலை - 1 கீற்று
  14. மிளகாய் வற்றல் விழுது - 1 + 1/2தேக்கரண்டி
  15. பீட்ரூட் விழுது - கலருக்காக

வழிமுறைகள்

  1. இறைச்சியை கழுவி சுத்தம் செய்து, முட்டை, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, தயிர், எலுமிச்சை, பீட்ரூட் விழுது சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. நன்கு ஊறிய இறைச்சியை, எண்ணையை சூடு செய்து மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. அதில் 50மிலி தண்ணீர் , சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அதில் பொரித்த இறைச்சியை சேர்த்து நீர் வற்றும் வரை அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும்.
  5. உணவகங்களில் கிடைக்கும் பொரிச்ச இறைச்சி இப்போது வீட்டிலே ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்