வீடு / சமையல் குறிப்பு / ஆட்டு எலும்பு சூப்

Photo of MUTTON bone soup by Priyadharshini Selvam at BetterButter
505
3
0.0(0)
0

ஆட்டு எலும்பு சூப்

May-19-2018
Priyadharshini Selvam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆட்டு எலும்பு சூப் செய்முறை பற்றி

உடலுக்கு நல்லது இந்த ஆட்டு எலும்பு சூப்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டு எலும்பு – கால் கிலோ
  2. வெங்காயம் – 2
  3. மஞ்சள்பொடி – ஒரு தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை – சிறிது
  5. பட்டை – 2
  6. கிராம்பு – 6
  7. மிளகு – ஒரு தேக்கரண்டி
  8. எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
  9. உப்பு – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஆட்டு எலும்பினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  2. நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள்பொடி ஆகியவற்றையும் அந்த தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.
  3. தண்ணீர் நன்கு கொதித்தவுடன், எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும். இந்த நேரத்தில் பாத்திரத்தை இறக்கிவிட்டு, ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
  4. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை தட்டிப் போடவும். அவை சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலையை அதில் போட்டுத் தாளிக்கவும்.
  5. பிறகு எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும்.
  6. சற்று கொதித்தவுடன் இறக்கி சூடாய் அருந்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்