பீகார் காதி பாடி | Bihari Kadhi Badi in Tamil

எழுதியவர் Jayshree Nishchal  |  5th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Bihari Kadhi Badi by Jayshree Nishchal at BetterButter
பீகார் காதி பாடிJayshree Nishchal
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

261

0

பீகார் காதி பாடி recipe

பீகார் காதி பாடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Bihari Kadhi Badi in Tamil )

 • 1/4 தேக்கரண்டி மிளகாய் விதைகள் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள்
 • 3-4 முழு சிவப்பு மிளகாய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 2 தேக்கரண்டி நெய்
 • தாளிப்புக்கு:
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 கப் உவர்ப்புத் தயிர்
 • 3 தேக்கரண்டி கடலை மாவு
 • 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
 • 2 தேக்கரண்டி சீரகத்தூள்
 • 1 இன்ச் இலவங்கப்பட்டை
 • 4 கிராம்பு
 • 5-6 பச்சை ஏலக்காய்
 • 1 கருப்பு ஏலக்காய்
 • 2-3 பிரிஞ்சி இலை
 • ஒரு தாராள சிட்டிகை பெருங்காயம்
 • 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
 • காதிக்கு:
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • ஒரு சிட்டிகை சமையல் சோடா (விருப்பம் சார்ந்தது)
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • மாவு தயாரிக்கத் தண்ணீர்
 • 1 குவியல் கப் கடலைமாவு
 • பாடிக்கு:

பீகார் காதி பாடி செய்வது எப்படி | How to make Bihari Kadhi Badi in Tamil

 1. பாடியைத் தயாரிப்பதற்கு, கடலை மாவு தண்ணீர் கொண்டு அடர்த்தியான மாவைத் தயாரித்து குறைந்தது 30 நிமிடங்கள் எடுத்து வைக்கவும். ஓய்வுக்குப் பின்னர், மாவை சற்றே பஞ்சுபோல் அடித்துக்கொள்ளவும். (தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக்கொள்ளலாம்)
 2. சீரகம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை மாவில் சேர்த்துக்கொள்ளவும்.
 3. ஒரு கராத்தியில் (கடாயை) எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. கடலைமாவு உருண்டைகளை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
 4. இப்போது கடாயில் கடுகு எண்ணெயை எடுத்துக்கொள்க. முழு மசாலாவையும் அதனுள் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக்கொள்க. மல்லி மிளகாய்த் தூளைச் சேர்க்கவும்.
 5. அடுத்து 1-2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பாடியை அல்லது பஜ்ஜியை கொதி நீரில் போடவும். 5-6 நிமிடங்கள் அல்லது பஜ்ஜி மிருதுவாகி உப்பும் வரை கொதிக்கவிடவும்.
 6. இதற்கிடையில், தயிர், கடலைமாவு இரண்டையும் 3-4 கப் தண்ணீரில் கலந்துகொள்க. மஞ்சள் தூளை அதனோடு சேர்த்துக்கொள்க.
 7. பாடி மிருதுவாகத் தோன்றியதும் இந்தக் கலவையை கடாயில் சேர்க்கவும். உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கொதிக்கவிடவும். பதத்தைச் சரிபார்த்து தேவைப்பட்டால் அதிகமாகத் தண்ணீர் சேர்க்கவும். உப்புக்காரம் சரிபார்க்கவும்.
 8. சரியான பதத்தை 5-6 நிமிடங்களில் காதி அடைந்திருக்கவேண்டும். வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
 9. ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்திக்கொள்க. சீரகம், முழு சிவப்பு மிளகாய், மிளகாய்த் துண்டுகள் அல்லது தூளைச் சேர்க்கவும். இந்த தாளிப்பை காதியில் சேர்க்கவும்.
 10. ஆவிபறக்கும் சாதத்தோடு பரிமாறுக.

எனது டிப்:

சிறப்பாக வருவதற்குப் புதியக் கடலை மாவைப் பயன்படுத்துக. படியைத் தயாரிக்க கடலை மாவை நன்றாக அடித்துக்கொள்க. ஒரு கப் தண்ணீரில் விட்டுச் சோதித்துப் பார்த்துக்கொள்ளவும். மாவு மிதந்தால் சரியாக வந்துள்ளது என்று பொருள். மூழ்கினால் இன்னும் அடிக்கவேண்டும்.

Reviews for Bihari Kadhi Badi in tamil (0)