Home / Recipes / Vattilappam

Photo of Vattilappam by Raihanathus Sahdhiyya at BetterButter
807
6
0.0(0)
0

Vattilappam

Oct-03-2017
Raihanathus Sahdhiyya
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vattilappam RECIPE

மிகவும் சத்தான பாரம்பரிய தமிழக உணவு ....இதோ உங்களுக்காக! இது பண்டிகை காலங்களில் தவறாது இடம்பெற்றுவிடும்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Eid
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Whisking
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 6

  1. முட்டை : 5
  2. தேங்காய்: 2கப் (250 மி.லி)
  3. சீனி: 15 மேசைக்கரண்டி
  4. முந்திரி, பாதாம் : ஒரு கைப்பிடி
  5. கோக்கோ பவுடர் : 2 தேக்கரண்டி
  6. நெய் : 2 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையையும் சீனியும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். அதிக நுரைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும்
  2. தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். தேங்காய்ப்பாலிற்கு சிறிது கூட தண்ணீர் சேர்க்கக் கூடாது.
  3. தேங்காய்ப்பாலில் கோக்கோ பவுடரை சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கலக்கவும்
  4. தேங்காய்ப்பால் கலவையை முட்டை சீனி கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும்
  5. இறுதியாக நெய் சேர்க்கவும். முந்திரி, பாதாமும் சேர்க்கவும்
  6. குக்கரில் தண்ணீர் ஊற்றவும்
  7. ஒரு ஸ்டாண்ட் வைக்கவும்
  8. தண்ணீரின் அளவு ஸ்டாண்டின் அளவு மட்டுமே இருக்க வேண்டும்
  9. தயாரித்த கலவையை ஸ்டாண்டின் மீது வைக்கவும் . ஒரு மூடி போடவும். கவனம் : தண்ணீரின் அளவு பாத்திரத்தை தொடக் கூடாது.
  10. குக்கரை மூடி மிதமான தீயில் சமைக்கவும். கேஸ்கெட்டும் விசிலும் எடுக்கத் தேவையில்லை
  11. முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்க வேண்டும். பிறகு அடுப்பை குறைத்துவிட வேண்டும்
  12. ஒரூ ஃபோர்க்கினால் வட்டிலப்பம் சேர்ந்து விட்டதா என்று பார்க்கவும்
  13. இறுதியாக வட்டிலப்பம் குளிர்ந்த பின்னர் துண்டுகள் போட்டு மேலே சிறிது நட்ஸ் தூவி பரிமாறவும். (ஃபிரிட்ஜில் வைத்து கூட பின்னர் குளிர்ச்சியாக பரிமாறலாம்)
  14. பொதுவாக வட்டிலப்பம் கோகொ பவுடர் சேர்க்காமல் தான் செய்யப்படும். ஒரு ட்விஸ்டிற்காக நான் அதை சேர்த்துள்ளேன்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE