Home / Recipes / Vermicilli Mutton Briyani

Photo of Vermicilli Mutton Briyani by Asiya Omar at BetterButter
636
6
0.0(0)
0

Vermicilli Mutton Briyani

Oct-05-2017
Asiya Omar
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Festive Fun
  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Steaming
  • Main Dish

Ingredients Serving: 6

  1. சேமியா - அரைக்கிலோ
  2. மட்டன் அரைக்கிலோ
  3. வெங்காயம் -150 கிராம்
  4. தக்காளி -200கிராம்
  5. பச்சை மிளகாய் - 3
  6. மல்லி புதினா - தலா ஒரு கையளவு
  7. எலுமிச்சை பாதி - சிறிய து
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒன்னரை டேபிள்ஸ்பூன்
  9. சில்லி பவுடர் - ஒன்னரை டீஸ் பூன்
  10. மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
  11. தயிர் 2 டேபிள் ஸ்பூன்
  12. தேங்காய் பால் - அரை காயிலிருந்து
  13. உப்பு - தேவைக்கு
  14. எண்ணெய் -100 மில்லி
  15. நெய் - 50 மில்லி

Instructions

  1. முதலில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.இது மிக முக்கியமான ஸ்டெப்.
  2. மட்டன் துண்டு களைச் சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
  3. மட்டனுடன் மஞ்சள்தூள்,அரைடீஸ்பூன் சில்லி பவுடர்,தயிர் உப்பு சேர்த்து விரவி ஊற வைக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் 1டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்) சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.விரும்பினால் முழுதாகவும் சேர்க்கலாம்.நான் வாயில் அகப்படும் என்று பொடித்து போட்டுவிடுவேன்.
  5. அத்துடன் தக்காளி, மிளகாய், மல்லி புதினா சேர்த்து வதக்கவும்.உப்பு சிறிது சேர்த்து மசிய விடவும்.சில்லி பவுடர் சேர்க்கவும்.
  6. ஊறிய மட்டன் சேர்த்து பிரட்டி அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 - 5 விசில் விட்டு வேக வைத்து அணைக்கவும்.
  7. ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
  8. பிரியாணி செய்யும் பாத்திரத்தில் வெந்த மட்டன் சேர்த்து தேங்காய்ப்பால் சேர்க்கவும்.மொத்தம் தேங்காய்ப் பால் தண்ணீர் அளவு சேமியாவிற்கு ஒன்னரை அளவு இருக்க வேண்டும்.எலுமிச்சை ஜூஸ் விடவும்.
  9. உப்பு சரி பார்த்து வறுத்த சேமியாவை தட்டவும்.சிம்மில் வைத்து மூடி தம் செய்யவும்.
  10. 5 நிமுடம் கழித்து திறந்து பிரட்டி விடவும்.தண்ணீர் வற்றி சேமியா வெந்து மேலே வரும்.2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவம்.
  11. 5 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி விட்டுப் பரிமாறவும்.
  12. சுவையான சேமியா பிரியாணி தயார்.நல்லா சாப்பிடுபவர்கள் என்றால் அரைகிலோ நான்கு பேருக்குத் தான் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE