Home / Recipes / Coconut Veg Kurma

Photo of Coconut Veg Kurma by Janaki Priya at BetterButter
613
4
0.0(0)
0

Coconut Veg Kurma

Oct-08-2017
Janaki Priya
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Pressure Cook
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெங்காயம் -1
  2. பச்சைமிளகாய் -3
  3. இஞ்சிபூண்டு விழுது-  1 தேக்கரண்டி
  4. சிறிய துண்டுகளாக நறுக்கிய கலவை காய்கறி  -1 கப் -10
  5. (கேரட் - 1
  6. உருளைக்கிழங்கு-1 பீன்ஸ்
  7. காலிபஃளவர் பூக்கள் - சிறிதளவு
  8. பச்சை பட்டாணி- சிறிதளவு)
  9. மஞ்சள்தூள்- 1 தேக்கரண்டி
  10. சிகப்பு மிளகாய்தூள்- 1 தேக்கரண்டி
  11. தனியா தூள் -1 தேக்கரண்டி
  12. கரம் மசாலாதூள்- 1/2 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கேற்ப
  14. வதக்கத் தேவையானவை:
  15. நெய்/எண்ணெய்- 1 தேக்கரண்டி
  16. பிரியாணி இலை-2
  17. பட்டை - சிறிய துண்டு
  18. ஏலக்காய்-2
  19. கிராம்பு-2
  20. மராட்டி மொக்கு-1
  21. சீரகம் - 1 தேக்கரண்டி
  22. விழுதாக அரைக்க தேவையானவை:
  23. தேங்காய் துருவல் -1 கப்
  24. நீரில் ஊற வைத்த கசகசா - 1 தேக்கரண்டி
  25. சோம்பு- 1 தேக்கரண்டி
  26. நீரில் ஊற வைத்த முந்திரி பருப்பு-10
  27. பச்சை மிளகாய்-2
  28. சிறிது கொத்தமல்லி இலை - அலங்கரிக்க

Instructions

  1. 1. மேலே ககுறிப்பிட்ட "விழுதாக அரைக்க தேவையான" பொருட்களை மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. 2. சிறிய துண்டுகளாக  நறுக்கிய கலவை காய்கறிகளை சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. 3.  தற்போது சூடான வாணலியில் சிறிதளவு எண்ணெய்/நெய் விட்டு, மேலேக் குறிப்பிட்ட "வதக்கத் தேவையானவற்றை"ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து குறைந்த சூட்டில் வதக்கவும்.
  4. 4. பின் இரண்டாக நறுக்கிய பச்சைமிளகாய்,  வெங்காயத்தை துண்டுகள்,இவற்றை சேர்த்து அதனுடைய பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும்.
  5. 5. பின் இதனுடன் வேக வைத்த காய்கறிகள், மஞ்சள்தூள், சிகப்பு மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலாதூள் இவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கவனமாக காய்கறிகள் உடையாமல் வதக்கவும்.
  6. 6. இதனுடன் தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 - 8  நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். இடையிடையே கவனமாக கிளறவும்.
  7. 7. பின் தேங்காய் மசாலா விழுது காய்கறிகளுடன் நன்றாக கலந்துள்ளதா என்பதை சரி பார்த்து, தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, குருமா சரியான பதத்தில் வந்தவுடன் இறக்கவும்.
  8. 8. பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலையை தூவ, சுவையான தேங்காய் காய்கறி குருமா தயார்!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE