Home / Recipes / Gobi Almond Gravy

Photo of Gobi Almond Gravy by Ayesha Ziana at BetterButter
275
3
0.0(0)
0

Gobi Almond Gravy

Dec-27-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gobi Almond Gravy RECIPE

ரிச்சான காலிபிளவர் கிரேவி. சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Boiling

Ingredients Serving: 3

  1. காலி பிளவர் 1
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பாதாம் 10
  5. பச்சை மிளகாய் 2
  6. இஞ்சி சிறு துண்டு
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. மல்லி தூள் 1 ஸ்பூன்
  11. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  12. கசூரி மேத்தி 2 ஸ்பூன்
  13. உப்பு தேவைக்கு
  14. எண்ணெய் தேவைக்கு

Instructions

  1. மிக நன்றாக கொதித்த தண்ணீரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, காலி பிளவரை போட்டு மூடி 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் வடிகட்டி கொள்ளவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பாதாமை போட்டு மூடி 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் தோலுரித்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி, கோபியை 5 நிமிடங்கள் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  4. அதே கடாயின் எண்ணெயில், சீரகம் , துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  5. பின்னர் வெங்காயம், தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. அதன் பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து சேர்த்து வதக்கவும்.
  7. பின், அரைத்த பாதாம் விழுது, உப்பு சேர்த்து 10 முதல் 12 நிமிடங்கள் நன்றாக கிரேவி பதம் வரும் வரை சமைக்கவும்.
  8. அதன் பின் காலி பிளவரை சேர்த்து சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
  9. இறுதியாக கசூரி மேத்தியை கசக்கி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE