Home / Recipes / Palak Paneer

Photo of Palak Paneer by Krishnasamy Vidya Valli at BetterButter
510
3
0.0(0)
0

Palak Paneer

Feb-19-2018
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Palak Paneer RECIPE

பாலக் கீரையை வைத்து செய்யும் கிரேவி வெரைட்டி இது. கூடவே பனீரும் சேர்ப்பதால் அருமையான சுவையில் இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாலக் கீரை - 1 கட்டு
  2. பல்லாரி வெங்காயம் -2
  3. தக்காளி -2
  4. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  5. உப்பு -1 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் -3/4 தேக்கரண்டி
  7. கரம் மசாலா -3/4 தேக்கரண்டி
  8. தனியா பொடி - 1/2 தேக்கரண்டி
  9. சீரகப்பொடி -1/2 தேக்கரண்டி
  10. ஆம்சூர் பவுடர் -1/4 தேக்கரண்டி
  11. பனீர் - சதுரமாக நறுக்கியது -8 முதல் 10 துண்டுகள்
  12. பனீரை டீப்ப்ரை/ஷாலோ ப்ரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்
  13. தாளிக்க
  14. நெய்/எண்ணெய் -2 தேக்கரண்டி
  15. பட்டை -1 சிறிய துண்டு
  16. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  17. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி

Instructions

  1. கீரையை நன்றாக அலம்பி நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. கீரையை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்
  5. கீரை அளவு குறைந்து பாதிக்குமேல் வெந்ததும் உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறவும்.
  6. கீரையை நன்றாக மசித்து கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  7. விருப்பப்பட்டால் மிக்ஸியில் பாதியளவு கீரையை லேசாக அரைத்துக்கொள்ளலாம்.
  8. பனீரை டீப்ப்ரை/ஷாலோ ப்ரை செய்து எடுக்கவும்
  9. பனீரை கிரேவியில் கலந்து பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE