Home / Recipes / Curd brinjal gravy

Photo of Curd brinjal gravy by Uma Maheswari at BetterButter
507
6
0.0(0)
0

Curd brinjal gravy

Mar-08-2018
Uma Maheswari
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd brinjal gravy RECIPE

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கத்தரிக்காய்,உப்பு,சிறிது மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். காய் வெந்ததும் இறக்கி வைத்து ஆறியதும் தயிர் கலந்து வைக்கவும்.வேறு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை கொண்டு தாளித்து சி.வெங்காயம்,பூண்டு,தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த விழுது, நீர் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் தயிர் கத்தரிக்காய் கலவையை ஊற்றி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்தரிக்காய் 1/4 கிலோ
  2. சின்ன வெங்காயம் 10
  3. பெரிய வெங்காயம் 3
  4. தக்காளி 3
  5. பூண்டு பல் 10
  6. புளி சிறிது
  7. வெல்லம் சிறிது
  8. தாளிக்க கடுகு,உளுந்தம்பருப்பு,வெந்தயம்,சீரகம்,பெருங்காயதூள்
  9. நல்லெண்ணெய் தேவையான அளவு
  10. தயிர் 5 டேபிள் ஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. மிளகாய்தூள் 3டேபிள் ஸ்பூன்
  13. மல்லிதூள் 3டேபிள் ஸ்பூன்

Instructions

  1. சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டாக நறுக்கவும்.ஒரு தக்காளியை பொடியாக நறுக்கவும்.கத்தரிக்காயை நான்காக கீறி வைக்கவும்.காம்பை நீக்க வேண்டாம்
  2. பெரிய வெங்காயம்,தக்காளி,மி.தூள்,ம.தூள்,புளி,வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்,1/2 டீஸ்பூன் உப்பு,1/2 டீஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.மூடி வைத்து 7 நிமிடம் வேக விடவும்.
  4. இறக்கி ஆறியதும் தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு தாளித்து சி.வெங்காயம்,பூண்டு,கறிவேப்பிலை,தக்காளி சேர்த்து வதக்கி,உப்பு, அரைத்த விழுது,நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. குழம்பு கெட்டியானதும் தயிர் கத்தரிக்காய் கலவை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
  7. வித்தியாசமான,சுவையான குழம்பு தயார்.சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE