Home / Recipes / Mutton Pepper Fry

Photo of Mutton Pepper Fry by Jayasakthi Ekambaram at BetterButter
493
2
0.0(0)
0

Mutton Pepper Fry

May-15-2018
Jayasakthi Ekambaram
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. மட்டன் 500கிராம்
  2. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. பச்சை மிளகாய் 2
  6. பட்டை 1 அங்குல துண்டு
  7. இலவங்கப்பட்டை 2
  8. மிளகு 1 ஸ்பூன்
  9. உப்பு தூள் 2 ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  11. எண்ணெய் 4 ஸ்பூன்
  12. தண்ணீர் 500 மிலி
  13. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  14. கருவேப்பிலை 1 கொத்து
  15. கொத்தமல்லி 1 பிடி
  16. சோம்பு தூள் 1 ஸ்பூன்

Instructions

  1. மட்டனை தண்ணீர் ஊற்றி 4 முறை அலம்பி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. தக்காளியுடன் பச்சை மிளகாயையும் மிளகு, பட்டை இலவங்கம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 1 ஸ்பூன் சோம்பு தூள் போடவும்.
  5. உடனே நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. அது பொன்னிறமாக வதங்கியதும் கருவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  7. அது நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  8. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்க்கவும்.
  10. மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  11. மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து வதக்கவும்.
  12. 2 நிமிடங்கள் வதக்கவும்.
  13. தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
  14. ஆவி வந்ததும் வெயிட் போடவும்.
  15. விசில் வந்ததும் அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
  16. இந்த நிலையில் 10 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
  17. ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறந்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும்.
  18. தேவையான பதம் வந்ததும் வேறு பாத்திரத்தில் போட்டு கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE