வீடு / சமையல் குறிப்பு / பொரித்த உருளைக்கிழங்கு வருவல்

Photo of Fried potato masala by senthil vanan at BetterButter
406
1
4.0(0)
0

பொரித்த உருளைக்கிழங்கு வருவல்

Jun-19-2018
senthil vanan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பொரித்த உருளைக்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 250 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. பூண்டு 6 பல்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. மல்லி இலை சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. ஆயில் 200ml

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை விருப்பமான வடிவில் கட் செய்யவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்
  3. உருளைக்கிழங்குடன் மஞ்சள் உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைக்கவும்
  4. வேகவைத்த உருளை கிழங்கு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
  6. பின்பு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. பின்னர் பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
  9. உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  10. இதில் பொரித்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறவும்
  11. பொரித்த உருளைக்கிழங்கு மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்