தாமரைத் தண்டு குழம்பு | Lotus Stem Curry - Thamaraithandu PuliKuzhambu in Tamil

எழுதியவர் Vins Raj  |  18th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Lotus Stem Curry - Thamaraithandu PuliKuzhambu by Vins Raj at BetterButter
தாமரைத் தண்டு குழம்புVins Raj
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

303

0

Video for key ingredients

  தாமரைத் தண்டு குழம்பு recipe

  தாமரைத் தண்டு குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Lotus Stem Curry - Thamaraithandu PuliKuzhambu in Tamil )

  • தக்காளி 1 சிறிய அளவு
  • 2 பச்சை மிளகாய்
  • ½ தேக்கரண்டி சீரகம்
  • ½ தேக்கரண்டி மிளகு
  • 15 சின்ன வெங்காயம்
  • ½ கப் துருவப்பட்ட தேங்காய்
  • அரைப்பதற்கு:
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • 1 தேக்கரணடி தாளிப்பு வடகம் – இது ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ½ தேக்கரணடி சீரகம், ¼ தேக்கரணடி வெந்தயம் ஆகியவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
  • 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1 பச்சை மிளகாய்
  • 10 பூண்டு பற்கள்
  • ¼ தேக்கரண்டி, மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  • 1 தேக்கரண்டி புளி, அளவிடும் கரண்டியில் 1 தேக்கரண்டி புளியை மெதுவாக நசுக்கிக்கொள்ளவும், சிறிய நெல்லிக்காய் ஒன்றின் அளவில் இருக்கவேண்டும்
  • 15 துண்டுகளாக நறுக்கப்பட்ட தாமரை வேர்

  தாமரைத் தண்டு குழம்பு செய்வது எப்படி | How to make Lotus Stem Curry - Thamaraithandu PuliKuzhambu in Tamil

  1. தாமரைத் தண்டை மண்ணும் தூசும் இல்லாமல் கழுவிச் சுத்தப்படுத்தவும். முள்ளங்கிக்குச் செய்வதைப் போல் மேல் தோலை சீவி எடுத்துவிடவும். தண்டைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தாமரைத் தண்டு அடர் நிறத்திற்கு மாறத் துவங்கும் அதனால் வெடியதும் உடனே ஒரு தண்ணீர் பாத்திரத்தில் போடவும்.
  2. புளிக்கரைசலைப் பிழிந்தெடுத்து ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும். கரைசலோடு சாம்பார் பொடி, நறுக்கப்பட்ட தாமரைத் தண்டுகள், பூண்டு பற்கள், நறுக்கப்பட்ட ஒரு மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பிளெண்டரில் தண்ணீர் சேர்த்து தேங்காயை மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அரைத்த தேங்காயில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், மிளகு, தக்காளி, 7 கறிவேப்பிலை சேர்த்து வைப்பர் பொத்தானை மூன்று முறை அழுத்தவும், பொருள்கள் கரடுமுரடாக மசிவதற்கு.
  5. இப்போது அரைத்த பொருள்களை புளிப் பாத்திரத்திற்குள் போடவும். இந்த சமயத்தில் கலவை உப்பு காரத்திற்கு சோதிக்கவும். இந்த சமயத்தில் சேர்க்கைகளைச் சேர்ததுக்கொள்ளுங்கள்.
  6. ஒரு கடாயில், நல்லெண்ணெயை, தாளிப்பு வடாகம் அல்லது விரும்பமான தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். கடுகு பொறிய ஆரம்பித்ததும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். கலவையை ஒரு கடாய்க்கு மாற்றி உயர் தீயில் கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.
  7. கொதிநிலைக்கு வரும்வரை குழம்பைக் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  8. தீயை மிதமான நிலைக்குக் குறைக்கவும். குழம்பு மிதமான தீயில் மூடிபோட்டு 12 நிமிடங்கள் இருக்கட்டும், தாமரைத் தண்டு வேவதற்கு நேரம் எடுக்கும் என்பதால்.
  9. இப்போது கொத்துமல்லி சேர்த்து தீயை நிறுத்தவும். சூடாகச் சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

  எனது டிப்:

  இந்த உணவை எந்தக் காய்கறியோடம் நீங்கள் சமைக்கலாம். சூடாவதற்குள் புளிக்கரைசலோடு நேரடியாகச் சேர்க்கும்போது தேங்காய் கெட்டியாகிவிடாது. கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு, அனைத்துச் சுவைகளையும் ஒன்றாக ஒரு கீரிம் பதத்திற்கு மாறிவிடும். மல்லி மற்றும் மிளகாயுடன் வீட்டில் தயாரிப்பதாகக் கருத்தில் கொண்டு சாம்பார் பொடிக்கான அளவு 2:1 விகிதம். தென்னிந்தியா பிராண்ட் சாம்பார் பொடியைப் பயன்படுத்தினால் முதலில் 1 தேக்கரண்டி சேர்த்து காரத்தைச் சரிபார்த்த பிறகு தேவைப்பட்டால் சேர்க்கவும், கடையில் வாங்கிய தூளில் காரச் சுவை தூக்கலாக இருக்கும் என்பதால்.

  Reviews for Lotus Stem Curry - Thamaraithandu PuliKuzhambu in tamil (0)