வெண்டைகாய் வறுவல் (மிருதுவான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் வறுவல்) | Bhindi Fry (Crispy Mangalore style Lady's Fingers fry) in Tamil

எழுதியவர் Antara Navin  |  22nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Bhindi Fry (Crispy Mangalore style Lady's Fingers fry) by Antara Navin at BetterButter
வெண்டைகாய் வறுவல் (மிருதுவான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் வறுவல்)Antara Navin
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

370

0

வெண்டைகாய் வறுவல் (மிருதுவான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் வறுவல்) recipe

வெண்டைகாய் வறுவல் (மிருதுவான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் வறுவல்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Bhindi Fry (Crispy Mangalore style Lady's Fingers fry) in Tamil )

 • 2 டீக்கரண்டி கடுகு எண்ணெய்
 • 250 கிராம் வெண்டைக்காய்
 • ஒரு கொத்து கருவேப்பிலை
 • வறுப்பதற்கு எண்ணெய்
 • சுவைகேற்ப உப்பு
 • 1/4 டீக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
 • 1/2 டீக்கரண்டி மஞ்சள்தூள்
 • பெருங்காயம்
 • 1 டீக்கரண்டி காஸ்மீரி மிளகாய் பொடி
 • 2 டீக்கரண்டி மெட்ராஸ் கறிப் பொடி
 • 1.5 தேக்கரண்டி அரிசி மாவு

வெண்டைகாய் வறுவல் (மிருதுவான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் வறுவல்) செய்வது எப்படி | How to make Bhindi Fry (Crispy Mangalore style Lady's Fingers fry) in Tamil

 1. வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். நீர் இல்லாமல் ஒவ்வொரு வெண்டைக்காயையும் தனியாக கிச்சன் பேப்பர் துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இது முக்கியமான ஒன்று. இதை தவிர்க்க வேண்டாம்.
 2. வெண்டைக்காயை 1 அங்குல அளவிற்கு வெட்டவும். பிறகு அதில் கடுகு எண்ணெயை நன்கு தடவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 3. ஒரு தனி கிண்ணத்தில் அரிசி மாவு,பெருங்காயம்,கறி பொடி,காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை தேவைக்கேற்ப கலக்கவும்.
 4. ஒரு கிண்ணத்தில் இந்த கலவையுடன் வெண்டைக்காய் துண்டுகளை கலக்கவும். வெண்டைக்காயில் அனைத்துப் பகுதிகளிலும் கலவை படும்படி நன்கு கலக்கவும். இதை குறைந்தது 1 மணி நேரம் தனியாக வைக்கவும்.
 5. காய்கறிகளை லேசாக வறுப்பதற்கு பாத்திரத்தில் எண்ணெயை சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் கறி இலைகள் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். பிறகு ஊறவைத்த வெண்டைக்காயையை சேர்த்து வறுக்கவும். வெண்டைக்காய் மிதமான சூட்டில் முழுவதுமாக வறுபடும் வரை வைத்திருக்கவும்.
 6. உடனடியாக சூடான மற்றும் மென்மையான வெண்டைக்காய் வறுவலை பரிமாறவும். நீங்கள் நறுமணத்திற்காக சிறுது எலும்பிச்சை சாரை தூவிக்கொள்ளலாம்.

Reviews for Bhindi Fry (Crispy Mangalore style Lady's Fingers fry) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.