வீடு / சமையல் குறிப்பு / கேரமல் பாயாசம்

Photo of Caramel Payasam by Menaga Sathia at BetterButter
317
2
0.0(0)
0

கேரமல் பாயாசம்

Jun-30-2018
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரமல் பாயாசம் செய்முறை பற்றி

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பாயாசம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொழுப்புள்ள பால் - 2 கப்
  2. சர்க்கரை -1/3 கப் +1 டேபிள்ஸ்பூன்
  3. டபுள் ரோஸ்டட் ரவா -1/4 கப்
  4. நெய் -1 டீஸ்பூன்
  5. முந்திரி,திராட்சை -தலா 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் சர்க்கரை,நீர் ஊற்றவும்
  2. அடுப்பில் வைத்து கரையும் வரை கலக்க வேண்டாம்.சர்க்கரை கரைந்து மெல்ல நிறம் மாறும் போது கலக்கவும்.
  3. நல்ல ப்ரவுன் கலரில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். கவனமாக செய்யவும்,இல்லையெனில் தீய்ந்துவிடும்.
  4. இப்பொழுது கவனமாக பாலை ஊற்றி கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
  5. பால் நன்றாக கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து மூடிவைக்கவும்.
  6. டபுள் ரோஸ்டட் ரவை என்பதால் அந்த சூட்டிலயே வெந்துவிடும்.பின் நெய்யில் முந்திதி,திராட்சை வறுத்து சேர்க்கவும்.
  7. இதற்கு ஏலக்காய் தூள் சேர்க்கதேவையில்லை.சேர்த்தால் கேரமல் சுவை தெரியாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்