வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அரிசி புளி பொங்கல்

Photo of Red rice puli Pongal by Krishnasamy Vidya Valli at BetterButter
737
1
0.0(0)
0

சிவப்பு அரிசி புளி பொங்கல்

Jul-03-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அரிசி புளி பொங்கல் செய்முறை பற்றி

காலை நேரத்திற்கு ஏற்ற பொங்கல் வெரைட்டி. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு பச்சரிசி 1 கப்
  2. புளி -பாதி நெல்லிக்காய் அளவு
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. வெல்லம் -1 சிறிய துண்டு
  5. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
  8. கடுகு 1 தேக்கரண்டி
  9. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  11. கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி
  12. வறுத்த வேர்கடலை 1 மேஜைக்கரண்டி
  13. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  14. மிளகாய் வத்தல் -4 முதல் 6
  15. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிவப்பு அரிசியை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து விட்டு துணியில் காயவிடவும்
  2. ஈரம் காய்ந்ததும் மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மஞ்சள் பொடி புளி கரைசல் உப்பு வெல்லம் சேர்க்கவும் ( புளியை நீர்க தோராயமாக மூன்று கப் அளவிற்கு கரைத்துக்கொள்ளவும்)
  4. கொதி வந்தவுடன் திரித்து வைத்ததை சேர்த்து கிளறவும்
  5. கிளறியதை குக்கரில் ஒரு விசில் வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்